மதனை கண்டுபிடிக்க அவரது இரண்டாவது மனைவியை விசாரியுங்கள் - உயர்நீதிமன்றத்தில் வேந்தர் தரப்பு வாதம் - 4 வாரத்தில் கண்டுபிடிக்க போலீசாருக்கு உத்தரவு

First Published Oct 25, 2016, 6:01 AM IST
Highlights


வேந்தர் மூவீஸ் மதன் மாயமான வழக்கில் 4 வார காலத்தில் மதனை கண்டுப்பிடித்து விடுவதாக வாக்குறுதி, 4 வாரத்தில் கண்டுபிடித்து ஆஜர் படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

மாயமான வேந்தர் மூவீஸ் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தக்கோரி, அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தில் மருத்துவ இடம் வாங்கித் தருவதாகக் கூறி மதன் கோடிக்கணக்கில் மோசடி செய்தது குறித்தும் பாதிக்கப்பட்ட பெற்றோர் தனியாக மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கை முதன்முதலாக விசாரித்த நீதிபதிகள் எஸ்.நாக முத்து, வி.பாரதிதாசன் ஆகி யோர் அடங்கிய அமர்வு, மதனை கண்டுபிடிக்கவும், பண மோசடி குறித்து விசாரிக்கவும் சிறப்பு போலீஸ் அதிகாரியாக கூடுதல் துணை ஆணையர் ராதா கிருஷ்ணனை நியமித்திருந்தது.

குறித்த காலத்திற்குள் கண்டுபிடித்து ஆஜர்படுத்தும் படி கெடுவும் விதித்திருந்தது.பின்னர் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன்

ஆகியோர் அடங்கிய அமர்வு, அக்டோபர் 6-ம் தேதிக்குள் மதனைக் கைது செய்து ஆஜர்படுத்தவில்லை என்றால் சென்னை போலீஸ் ஆணையர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் ந நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், எஸ்.பாஸ்கரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, விசாரணை அதிகாரி ராதாகிருஷ்ணன் தன்னுடைய விசாரணை அறிக்கையை தாக்கல் செய்து இருந்தனர். அதில் நான்கு வாரம் அவகாசம் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் ஜெயசந்திரன், பாஸ்கர் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ்.ஆர்.எம். கல்லூரி குழும தலைவர் பச்சமுத்துவின் சட்டவிரோத காவலில் உள்ளனர் என்றார்.  

அப்போது எஸ். ஆர்.எம். தரப்பில் ஆஜாரன வழக்கறிஞர் மதனை வாரனாசியில் நடமாடுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அப்படி இருக்கும் போது பச்சமுத்து சட்டவிரோத காவலில் எப்படி மதன் இருக்க முடியும். அவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர் அவர்களின் சட்டவிரோத காவலில் அடைத்திருக்கலாம் என்றார். 

அரசு தரப்பில் ஆஜாரான வழக்கறிஞர், போலீசார் மதனை இன்னும் 4 வாரத்தில் கண்டுபிடித்து விடுவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இன்னும் 4 வாரங்களில் மதனை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 29/ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்

click me!