
வேந்தர் மூவிஸ் மதன்வழக்கு விசாரணையை சிறப்பாக , சரியாக நடத்த கூடுதல் ஆணையர் ஷங்கர் தலைமையில் விசாரணை குழு ஒன்றை கமிஷனர் ஜார்ஜ் அமைத்துள்ளார். இந்த குழு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்கும்.
வேந்தர் மூவிஸ் மதன் கடந்த மே மாதம் மாயமானார். அவர் 100
மேற்ப்பட்ட மாணவர்களிடம் ரூ 84 கோடி வரை கையாடல் செய்துவிட்டு பணத்துடன் மாயமானார். இது பற்றி விசாரிக்க பல வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன.
மதனை 6 மாத காலமாக தேடி வந்த போலீசார் கடந்த வாரம் திருப்பூரில் கைது செய்தனர். இதன் பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட மதனை 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இந்நிலையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ள மதனை விசாரிப்பதற்காக 2 கூடுதல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதனை 7 நாள் காவலில் எடுத்து, இன்று ஐந்தாவது நாளாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதன் மோசடி செய்த பணம் தொடர்பான ஆவணங்கள், மற்றும் சான்றுகளை கண்டுபிடிப்பதற்காக, கூடுதலாக இரண்டு அதிகாரிகள் நியமி த்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இது தவிர கூடுதல் ஆணையர் சட்டம் ஒழுங்கு தெற்கு சங்கர் , சட்டம் ஒழுங்கு இணை ஆணையர் கிழக்கு மனோகரன் தலைமையில் கூடுதலாக ஒரு துணை ஆணையர் , ஏற்கனவே இருக்கும் மூன்று கூடுதல் துணை ஆணையர்கள் கொண்ட குழு வழக்கை விசாரணை நடத்த கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக இணை ஆணையர் மனோகரன் செயல்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழு மதன் வழக்கு சம்பந்தப்பட்ட அனைத்து விசாரணைகளையும் நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்.