திராவிட மாடல் அரசின் வெற்றிப்பயணம் புத்தாண்டில் புதிய சாதனை உச்சத்தை தொடும்.! முதல்வர் ஸ்டாலின்

Published : Dec 31, 2023, 01:10 PM IST
திராவிட மாடல் அரசின் வெற்றிப்பயணம் புத்தாண்டில் புதிய சாதனை உச்சத்தை தொடும்.! முதல்வர் ஸ்டாலின்

சுருக்கம்

திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும் என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையும் என எடப்பாடி வாழ்த்து கூறியுள்ளார். 

ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

ஆங்கிலப்புத்தாண்டையொட்டி அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  புதிய சிந்தனை, புதிய இலக்குகளுக்கான வாசலைத் திறந்து வைத்து நம்பிக்கையின் ஒளிக்கதிர்களுடன் பிறக்கிறது இனிய புத்தாண்டு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், சமத்துவம், சகோதரத்துவம், சமூகநீதிக்கான பயணத்தில் எத்தனை தடைகள் எதிர்ப்பட்டாலும் அவற்றைத் தகர்த்தெறிந்து முன்னேறும் நமது திராவிட மாடல் அரசின் வெற்றிப் பயணம், வரும் புத்தாண்டில் புதிய சாதனை உச்சங்களைத் தொடும். 

அதற்கான நம்பிக்கையும் உறுதியும் புத்தாண்டில் நிறைந்துள்ளது. "எல்லார்க்கும் எல்லாம்" என்ற நமது இலட்சியம் நிறைவேறும் நிறைவான ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும்! அனைவருக்கும் எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

துன்பங்கள் விலகட்டும்- இபிஎஸ்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,  புலரும் புத்தாண்டை மலர்ச்சியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் அன்பிற்கினிய தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு, 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்ட ‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்', மக்களுக்கு துயரம் ஏற்படும் நேரங்களில் எல்லாம் ஓடோடிச் சென்று, அவர்களுக்கு உற்ற துணையாக இருந்து பேருதவி செய்து வருவதையும்; கழக ஆட்சிக் காலங்கள் 'தமிழக மக்களுக்கான பொற்காலங்கள்' என்பதையும் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

புத்தாண்டு வாழ்த்து

மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும்; அனைவரது வாழ்விலும் அன்பையும், மகிழ்ச்சியையும், நோய் இல்லாத வாழ்வையும், குறைவில்லாத செல்வத்தையும் வழங்கும் ஆண்டாக அமையவும், எல்லாம் வல்ல இறைவனை மனதார பிரார்த்தித்து, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

இதையும் படியுங்கள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்னும் அறிவிக்காதது ஏன்.? திட்டம் கைவிடப்பட்டு விடுமோ பொதுமக்கள் அச்சம்.! ராமதாஸ்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

மதுரை டூ நீலகிரி.. 15 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் மழை.. வெயிலுக்கு ரெஸ்ட்!
தேர்தல் அதிகாரியுடன் TVK ஆதவ் அர்ஜுனா அவசர சந்திப்பு! | TVK Aadhav Arjuna Meet CEO