சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்.. சென்னை டூ புதுச்சேரி சொகுசு கப்பல் பயணம்.. முதலமைச்சர் இன்று துவக்கம்..

Published : Jun 04, 2022, 11:15 AM IST
சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்.. சென்னை டூ புதுச்சேரி சொகுசு கப்பல் பயணம்.. முதலமைச்சர் இன்று துவக்கம்..

சுருக்கம்

சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.   

தமிழ்நாட்டில் முதல் முறையாக சுற்றுலா பயணிகளுக்காக சொகுசு கப்பல் திட்டம் சென்னையில் இன்று தொடங்கிறது. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், சொகுசு கப்பல் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைக்க உள்ளார். 

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டம் மற்றும் சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது.கோர்டேலியா கப்பல் என்ற கப்பல் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய திட்டத்தை தமிழக சுற்றுலாத்துறை செயல்படுத்துக்கிறது. 


மேலும் படிக்க: வாகன ஓட்டிகள் கவனத்திற்கு !! சென்னையில் இந்தெந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம்.. இன்று முதல் நடைமுறை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனி நீதிபதி உத்தரவால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!
நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பாற்பட்டதா திமுக அரசு? விளாசும் இபிஎஸ்