
இளம் பெண்ணை காதலித்து, நைசாக நழுவ முயன்ற வாலிபருகு கை கால்கள் விலங்கிட்டு உள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் வசித்து வருபவர் ஒரு இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இவர்கள் இருவரும், ஊரைவிட்டு வெளியேற முயற்சி செய்ததாக தெரிய வந்துள்ளது. இதனை அறிந்துக்கொண்ட ஊர் பொதுமக்கள், அந்த ஊர் நாட்டாமையான மாரியப்பன் முன், வாலிபரை நிறுத்தி உள்ளனர்
இதனை விசாரித்த நாட்டாமை, படத்தில் காண்பிப்பது போல 18 பட்டி தள்ளி வைப்பாரோ என்று எதிர்பார்த்த நிலையில், வாலிபரின் கை கால்களுக்கு விலங்கிட உத்தரவு பிறப்பித்து உள்ளார்
இந்த சம்மபவம் நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் உள்ள காமாட்சியம்மன் கோவில் தெற்கு தெருவில் நடைபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.