கிட்னி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய காதலன்... கண்ணீர் மல்க இளம்பெண் பரபரப்பு புகார்..!

Published : Jan 25, 2019, 10:11 AM IST
கிட்னி இல்லாததால் திருமணத்தை நிறுத்திய காதலன்... கண்ணீர் மல்க இளம்பெண் பரபரப்பு புகார்..!

சுருக்கம்

வயது வித்தியாசம் மற்றும்ஒரு சிறுநீரகம் இல்லாததைக் காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திவிட்டதாக காதலன் குடும்பத்தார் மீது இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

வயது வித்தியாசம் மற்றும்ஒரு சிறுநீரகம் இல்லாததைக் காரணம் காட்டி திருமணத்தை நிறுத்திவிட்டதாக காதலன் குடும்பத்தார் மீது இளம்பெண் ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். 

அந்த புகார் மனுவில் நான் என் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். இரண்டு வருடத்திற்கு முன்பு விக்கி(எ)விக்னேஷ்(29) என்பவர் நண்பர் மூலம் அறிமுகம் ஆனார். பின்னர் நாங்கள் வாட்ஸ் அப் மூலம் நண்பராக பழகினோம். பிறகு நாளடைவில் என்னை விக்னேஷ் காதலிப்பதாக கூறி திருமணம் செய்து கொள்வதாக கூறினார். அதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். ஏன் என்றால் என்னைவிட விக்னேஷ் மூன்று வயது இளையவர். பிறகு தொடர்ந்து வற்புறுத்தியதால் நான் அவரது காதலை ஏற்று கொண்டேன். 

அப்போது விக்னேஷிடன் எனக்கு பிறவியிலேயே வலது பக்கம் கிட்னி மட்டும் இருப்பதாக எனக்கு 4 வருடத்திற்கு முன்பு தான் தெரியும் என்று கூறினேன். இதற்கு விக்னேசும், நானும் கால்கள் தாங்கி தான் நடப்பேன் என்று கூறினார். 

அதன் பிறகு நாங்கள் இருவரும் நெருக்கமாக பழகினோம். விக்னேஷ் தற்போது ஐதராபாத்தில் வேலை செய்து வருகிறார். திருமணம் நிச்சயிக்கப்பட்ட பிறகு எனது தந்தை காலமானார். அதன் பிறகு எங்கள் வழக்கப்படி பெண் வீட்டார் தான் திருமண செலவுகளை ஏற்ற வேண்டும். மேலும் 20 சவரன் நகை வரதட்சணையாக கொடுக்க வேண்டும் விக்னேஷ் தரப்பினர் கேட்டனர். 

இதனால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது, என்னை இரண்டு கிட்னியோடு வந்தால் திருமணம் செய்து கொள்வதாக விக்னேஷ் மற்றும் அவரது வீட்டார் கூறிவிட்டனர். அனைத்தையும் முன் கூட்டியே அறிந்திருந்த விக்னேஷூம், அவரது குடும்பத்தாரும் தன்னை ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நதியா புகார் அளித்துள்ளார். நதியா தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் ஆதாரமாக கொடுத்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Chennai Metro Train: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்.! பூந்தமல்லி–போரூர் பாதையில் 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில்! சீறிப்பாயும் சென்னை மெட்ரோ.!
போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை