
தேனி
தேனியில் காதலி வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டில், காதலன் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கான காரணம் குறித்து காவலாளர்கள் விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம், மேலக்கூடலூர் 18-ஆம் கால்வாய் செல்லும் வழியில் பூட்டிய வீட்டுக்குள் இருந்து நேற்று கடுமையான துர்நாற்றம் வீசியது. அதனையடுத்து அருகில் உள்ளவர்கள் கூடலூர் வடக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த் வந்த காவலாளர்கள் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து திறந்து பார்த்தபோது உள்ளே இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்குப் பதிந்த காவலாளர்கள், விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், தூக்குப் போட்டுக் கொண்டவர் கூடலூர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த விவேக்பாண்டியன் (28) என்பதும், சரக்கு ஏற்றும் மினி டோர் ஓட்டுநராக உள்ளார் என்பதும் தெரிய வந்தது. மேலும், திருமணமாகாத இவர் தற்கொலை செய்து கொண்ட வீடு வள்ளி என்பவருக்குச் சொந்தமானது என்பதும், வள்ளிக்கு திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது என்பதும் விசாரணயில் தெரியவந்தது.
தொடர்ந்து விசாரணை நடத்தியதில், "வாகன ஓட்டுநரான விவேக் பாண்டியன், வள்ளியுடன் பழகி வந்துள்ளார். வள்ளி வெளியூர் சென்ற நிலையில், விவேக்பாண்டியன் வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்" என்பது தெரியவந்துள்ளது.
விவேக் பாண்டியம் எதற்காக தற்கொலை செய்துகொண்டார்? என்று கூடலூர் வடக்கு காவல் நிலைய காவலாளர்கள் விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
காதலி வீட்டில் காதலன் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.