"எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது"... நடு ரோட்டில் காதலியின் கழுத்தை அறுத்த கொடூர காதலன்..!

 
Published : May 30, 2018, 08:16 PM ISTUpdated : Sep 19, 2018, 02:27 AM IST
"எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது"... நடு ரோட்டில் காதலியின் கழுத்தை அறுத்த கொடூர காதலன்..!

சுருக்கம்

lover murder attempt for his girlfriend

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவருக்கு அசோனா (20) என்ற மகள் உள்ளார். 

இவர் கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் பிரபாகரன் (25) என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இருவருக்கும் கடந்த சில மாதங்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அசோனா பிரபாகரன் மீதான காதலை முறித்துக் கொண்டு, அவரிடம் பேசுவதையே நிறுத்தியுள்ளார்.

இதையடுத்து விருத்தாசலத்தில் உள்ள வர்த்தக நிறுவனத்தில் வேலை செய்து வரும் அசோனாவை சந்தித்து, பிரபாகரன் தினமும் பேச முயற்சி செய்து வந்துள்ளார். ஒரு நிலையில் ஆத்திரமடைந்த பிரபாகரன் அவரை பழிவாங்க வேண்டும் என்று நினைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வழக்கம் போல் அசோனா வேலைக்கு சென்றுக்கொண்டிருந்த போது, பைக்கில் பின் தொடர்ந்து வந்த பிரபாகரன் அவரை தன் கையில் கொண்டு வந்த கத்தியால் கழுத்தை அறுக்க முயற்சி செய்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த அசோனா கத்தி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக ஓடி வந்து அசோனாவை காப்பாற்றியதுடன், பிரபாகரனையும் பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் உடனடியாக அவர் அங்கிருந்து தப்பினார். 

அதன் பின் அங்கிருந்தவர்கள் இந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும் இந்த பெண் கழுத்தில் சிறு காயம் மட்டுமே ஏற்பட்டுளதாகவும் உயிருக்கு ஆபத்து இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதைதொடர்ந்து விருத்தாசலம் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த பிரபாகரனை மடக்கி பிடித்து விசாரணை செய்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார். சந்தேகமடைந்து போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், தன்னுடைய காதலி அசோனா என்ற பெண்ணின் கழுதை தான் அறுத்து விட்டதாகவும், எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என்பதற்காக இப்படி செய்ததாக தெரிவித்துள்ளார். 


 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!