காதலியை தேடி ஊருவிட்டு ஊருவந்த காதலன்; மைனர் பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுப்பதாக தாய் போலீஸில் புகார்...

 
Published : Jun 02, 2018, 11:20 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
காதலியை தேடி ஊருவிட்டு ஊருவந்த காதலன்; மைனர் பெண்ணுக்கு காதல் தொல்லை கொடுப்பதாக தாய் போலீஸில் புகார்...

சுருக்கம்

lover come for girl friend mother complaint lover disturbing her Minor girl

திருச்சி 

காதலியை தேடி ஊருவிட்டு ஊருவந்த காதலனை, மைனர் பெண்ணான தனது மகளுக்கு காதல் தொல்லை கொடுப்பதாக கூறி தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். 

திருச்சி மாவட்டம், திருச்சி மாநகர் பகுதியைச் சேர்ந்த விதவை பெண்ணின், 15 வயது மகள் 10-ஆம் வகுப்பு முடித்துவிட்டு, அண்மையில் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தார். 

அங்கு வடபழனியில் தனியார் நிறுவனம் ஒன்றில், சென்னை சாலிகிராமம் நல்லியன் தெருவைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகன் பாலசுப்பிரமணியன் (19) வேலை பார்த்து வந்தார்.

மாணவியை பார்த்த உடனேயே பாலசுப்பிரமணியன் காதல் வயப்பட்டாராம். மாணவியுடன் பேசி நட்பை வளர்த்த பாலசுப்பிரமணியன், ஒரு கட்டத்தில் காதலிப்பதாக கூறியுள்ளார்.  அதனை மாணவியும் ஏற்றுக் கொண்டாராம். 

பின்னர் காதல் ஜோடி உற்சாகமாக சென்னையை சுற்றி வந்துள்ளனர்.  சென்னை மாநகரில் இருவரும் சுற்றித்திரிந்த தகவல் உறவினர்மூலம் திருச்சியில் உள்ள மாணவியின் தாயாருக்கு  தெரிந்துவிட்டது..

இதனையடுத்து சென்னை சென்ற தாய், மகளை உடனடியாக திருச்சிக்கு அழைத்து வந்துவிட்டார். இதனையறிந்த காதலன் பாலசுப்பிரமணியன், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காதலியை தேடி சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்தார். 

பாலசுப்பிரமணியன் திருச்சி வந்த தகவலை காதலிக்கு தெரிவிக்க, அவரும் காதலனை காணும் ஆர்வத்தில் வீட்டைவிட்டு வெளியேறினார். 

பின்னர், திருச்சியில் பல்வேறு பகுதியில் சுற்றித்திரிந்த அவர்கள், திருச்சி அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியில் இருப்பது மாணவியின் தாயாருக்கு தெரியவந்தது. உடனே அங்கு உறவினர்களுடன் சென்றவர், மகளை மீட்டதுடன் பாலசுப்பிரமணியத்தை திருச்சி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். 

மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், ஆய்வாளர் ஷீலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, 10-ஆம் வகுப்பு மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததாக பாலசுப்பிரமணியனை கைது செய்தார்.

மேலும், மாணவி ‘மைனர்’ என்பதால், காவலாளர்கள் அவருக்கு தகுந்த அறிவுரை வழங்கி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
 

PREV
click me!

Recommended Stories

நாகூர் ஹனீபாவும், கலைஞரும் நகமும், சதையுமாக இருந்தனர்.. முதல்வர் ஸ்டாலின் உணர்ச்சி பேச்சு
திட்டக்குடி அருகே அரசு பேருந்து டயர் வெடித்து கோர விபத்து! 7 பேர் உடல் நசுங்கி பலி!