
தனியார் லாரி ஒன்று பழைய பேப்பர்களை ஏற்றிக் கொண்டு சென்னை அண்ணா சாலை வழியாக சென்ட்ரல் நோக்கி சென்றது. அரசு பல்நோக்கு மருத்துவமனை அருகே சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த அந்தலாரி திடீரென சாலையில் கவிழ்ந்தது.
இதனால், லாரியில் இருந்து அனைத்து பேப்பர் பண்டல்களும் பிரிந்து சாலையில் விழுந்தன. இதனால், லாரியின் பின்னால் வந்த வானங்கள் ஆங்காங்கே அப்படியே நின்றுவிட்டன.
இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஓட்டுநரின் தவறே விபத்துக்கான காரணம் என்பது கண்டறியப்பட்டது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த அண்ணாசாலையில் லாரி திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.