“தமிழச்சியை பாத்தீங்களா… பிரான்ஸ் நாட்டுக்குள்ளே…” - கதிகலங்கிய பிரான்ஸ் தமிழச்சி

First Published Oct 22, 2016, 11:31 PM IST
Highlights


“தமிழச்சியை பாத்தீங்களா… பிரான்ஸ் நாட்டுக்குள்ளே…” - கதிகலங்கிய பிரான்ஸ் தமிழச்சி

முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து வதந்தியை பரப்பி வந்த பிரான்ஸ் தமிழச்சி, கடந்த சில நாட்களாக மாயமாகிவிட்டார். அவரை, “தமிழச்சியை பாத்தீங்களா… பிரான்ஸ் நாட்டுக்குள்ளே…” என பாட்டு பாடி தேடும் நிலை உள்ளது. இதற்கு, மத்திய அமைச்சர் ஒருவரே காரணம் என்றும் கூறப்படுகிறது.

முதலமைச்சர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22ம் தேதி உடல் நலக்குறைவால், சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லண்டன் டாக்டர் மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். மேலும், சிங்கப்பூரில் இருந்து பிசியோதெரபி பெண் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையில், முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து, சில விஷமிகள் அவதூறு வதந்திகளை பரப்பினர். இதுதொடர்பாக 53 வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி என்ற பெண், முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து அவதூறு வதந்திகளை பரப்பி வந்தார். அவர் மீது, அதிகளவில் வழக்குகள் போடப்பட்ன. ஆனால், அவர் சிறிதும் அசரவில்லை. முதலமைச்சர் உடல் நிலை பற்றிய அவரது மோசமான பதிவு பல தரப்பிலும் கண்டனம் செய்யப் பட்டது..!

அதன் பின் அவர் முற்றிலும் அமைதியாகி விட்டார். அவர் ஏன் இப்படி திடீர் என்று அமைதியானார் என்று அனைவருக்கும் குழப்பம். இந்த விஷயமாக ஒரு தகவல் ஒன்று இப்போது, உலா வருகிறது.

மத்திய அரசின் செல்வாக்கில் உள்ள ஒருவர், பிரான்ஸ் தூதரகத்தை தொடர்பு கொண்டு மிகக் கடுமையான எச்சரிக்கை ஒன்றை விடுத்தாராம்.

தமிழச்சி பிரான்ஸ் நாட்டு குடி உரிமை பெற்றவர். அவர் இந்தியா மற்றும் தமிழக உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பதும், தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்துவதும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என்றும் எச்சரித்த்தாக கூறப்படுகிறது.

அதன் பின்தான் தமிழச்சி மாயமாகிவிட்டார் …! முகநூலில் பதிவுகளும் இடுவதில்லை. என பரவலாக பேசப்படுகிறது.

click me!