லண்டன்  அருங்காட்சியகத்தில் இடம் பெற்ற முதல் தமிழரின் சிலை…. யாருக்கு தெரியுமா?

 
Published : Mar 12, 2018, 01:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:03 AM IST
லண்டன்  அருங்காட்சியகத்தில் இடம் பெற்ற முதல் தமிழரின் சிலை…. யாருக்கு தெரியுமா?

சுருக்கம்

london musium sathyar wax statute

பாகுபலி படத்தில் நடித்ததற்காக நடிகர் சத்யராஜின் கட்டப்பா உருவத்தை மெழுகு சிலையாக வைத்து லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகம் பெருமைப் படுத்தியுள்ளது. லண்டன் மியூசியத்தில் வைக்கப்படும் முதல் தமிழரின் சிலை என்ற பெருமையைப் பெற்றுள்ளார் நடிகர் சத்யராஜ்.

லண்டனில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகம் உலகில் பிரபலமானவர்களின் சிலைகளை மெழுகில் வடிவமைத்து சிறப்பித்து வருகிறது. இந்த மியூசியத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், சல்மான்கான், பிரதமர் மோடி போன்றோரின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.



இந்நிலையில் பிரபல இயக்குநர் எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான பாகுபலி படம் மிக பிரமாண்ட வெற்றியைப் பெற்றது.

இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் நடிகர் பிரபாசுக்கு மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகம்  மெழுகு சிலை அமைத்து கௌரவப்படுத்தியது. இந்நிலையில் பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்த சத்யராஜின் உருவத்தை  லண்டன் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகம் மெழுகு சிலையாக வைதுள்ளது

.

தமிழகத்தில் கமல், ரஜினி போன்ற சூப்பர் ஸ்டார்கள் இருந்தாலும் இந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் முதல் தமிழனின் உருவ சிலை என்ற பெருமை நடிகர் சத்யராஜுக்கு கிடைத்துள்ளது..

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!