நெருங்கும் தேர்தல்.. தமிழகத்தில் IPS, DCP மற்றும் SPகள் 13 பேர் அதிரடி இடமாற்றம் - வெளியானது அரசனை!

By Ansgar R  |  First Published Mar 12, 2024, 4:17 PM IST

IPS Officers Transfer : மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் தமிழகத்தில் IPS, DCP மற்றும் SPகள் 13 பேர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 


மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள நிலையில் தமிழக அரசு தற்போது ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளது. இன்று மார்ச் 12ம் தேதி செவ்வாய்க்கிழமை வெளியான அந்த அறிவிப்பின்படி தமிழகத்தில் உள்ள 13 IPS, DCP மற்றும் SPகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சிலருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா அவர்கள் பிறப்பித்துள்ள ஆணையில் சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு ஐஜி தேன்மொழி தற்பொழுது போலீஸ் பயிற்சி பள்ளியின் கூடுதல் இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோல அரக்கோணம் ASP யாதவ் க்ரிஷ் அசோக், எஸ்பி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருப்பூர் தெற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு பெற்றுள்ளார். 

Latest Videos

undefined

தமிழ்நாட்டுக்கு ரூ.6000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள்: எல்.முருகன் தகவல்!

உத்தமபாளையம் ஏஎஸ்பி மதுகுமாரி இப்பொழுது எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கின் துணை கமிஷனர் ஆகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதவி உயர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இதுபோல காரைக்குடி ஏஎஸ்பி ஸ்டாலின் அவர்களுக்கு எஸ்பி-யாக பதவி உயர்வு வழங்கப்பட்டு அவர் கோவை வடக்கு சட்டம் மற்றும் ஒழுங்கு துணை கமிஷனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

திருவள்ளூர் ஏஎஸ்பி ஆக பணிதியாற்றி வந்த விவேகானந்த சுக்லா இப்பொழுது எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு திருச்சி வடக்கு துணை கமிஷனர் ஆக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். அருப்புக்கோட்டை ஏஎஸ்பி காரத் கருண் உத்தவ் ராவ் தற்போது எஸ்பியாக பதவி உயர்வு வழங்கப்பட்டு மதுரை தெற்கு துணை கமிஷனர் ஆக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

திருச்சி வடக்கு துணை கமிஷனர் அன்பு, சென்னை ரயில்வே போலீஸ் எஸ்.பி யாக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். திருப்பூர் தெற்கு துணை கமிஷனர் வனிதா தற்போது சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அரை எஸ்பி யாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாஸ்டர் கட்டுப்பாட்டு அறை எஸ்பியாக இருந்த எஸ். ரமேஷ்பாபு இப்பொழுது சென்னை நவீன கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனர் ஆகவும், சென்னை நவீன கட்டுப்பாட்டு அரை துணை கமிஷனர் மகேஷ், சென்னை பாதுகாப்பு பிரிவு துணை கமிஷனர் ஆகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இறுதியாக மதுரை தெற்கு துணை கமிஷனர் பாலாஜி துணை ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  

சிஏஏ சட்டம்: முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகாரம் கிடையாது - அண்ணாமலை தாக்கு!

click me!