4 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்
4 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொள்கிறார். ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சியினர் இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது. இதனால், வேட்பாளர்கள் ஆதரவாக அக்கட்சியின் தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஏற்கனவே 3 முறை தமிழகம் வந்த பிரதமர் மோடி தற்போது 4வது முறையாக 4 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். ஏப்ரல் 9, 10, 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் வாகன பேரணி மற்றும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார்.
undefined
இதையும் படிங்க: நாட்டின் பிரதமர் என்று கூட பாராமல் மோடியை பார்த்து செல்வப் பெருந்தகை தரக்குறைவாக இப்படி பேசிட்டாரே?
பிரதமர் மோடியின் தமிழக பயணத் திட்டம்
* ஏப்ரல் 9ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி காலை வேலூரில் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து வாகன பேரணி, மாலை தென்சென்னை பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், மத்திய சென்னை வேட்பாளர் வினோஜ் பி செல்வம், வடசென்னை வேட்பாளர் பால் கனகராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக பேரணியாக சென்று பரப்புரை மேற்கொள்கிறார்.
* ஏப்ரல் 10ம் தேதி நீலகிரியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகனை ஆதரித்து வாகன பேரணியும், கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலையை ஆதரித்து பொதுகூட்டத்திலும் பங்கேற்கிறார்
* ஏப்ரல் 13ம் தேதி பெரம்பலூரில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
* ஏப்ரல் 14ம் தேதி விருதுநகரில் ராதிகா சரத்குமாரை ஆதரித்து பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்