திருப்பூரில் பூட்டிய கோவிலுக்குள் கும்மாளமிட்ட காதல் ஜோடி பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் சுவர் ஏறி குதித்து தப்பியோட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரில் பூட்டிய கோவிலுக்குள் கும்மாளமிட்ட காதல் ஜோடி பொதுமக்கள் சுற்றிவளைத்ததால் சுவர் ஏறி குதித்து தப்பியோட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அமராவதி ஆற்றங்கரை உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. பூஜை செய்யப்படும் நாட்களை தவிர மற்ற நேரங்களில் இக்கோவிலில் கதவுகள் சாத்தப்பட்டிருப்பது வழக்கம். இந்நிலையில் இந்த கோவிலின் மதில்சுவர் மீது காதல் ஜோடி ஒன்று உள்ளே சென்றுள்ளது. வெகுநேரமாக அவர்கள் வெளியே வந்தாததால், இதை கண்ட பொதுமக்கள் பூசாரிக்கு தகவல் தெரிவித்தனர்.
undefined
பூட்டை திறந்து கோவிலுக்கு உள்ளே சென்ற போது அங்கு இளம் காதல் ஜோடி சில்மிசத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பதை கண்டு சத்தம்போட்டனர்.
இதனையடுத்து பொதுமக்கள் சிலரும் கோவிலுக்குள் வந்து அவர்கள் இருவரையும் பிடிக்க முயன்றனர். அங்கும் இங்கும்மாக ஓடிய இருவரும் திடீரென கோவிலின் மதில் சுவரில் ஏறி, வயல் பகுதிக்குள் குதித்து ஓட தொடங்கினர்.
பொதுமக்கள் அவர்களை நிற்கும்படி சத்தம்போடவே விழுந்தடித்து ஓடிய காதல் ஜோடி மூச்சிரைக்க ரோட்டிற்குவந்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரின் உதவியோடு அங்கிருத்து தப்பித்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.