ஊராட்சி சபையில் புண்ணான உதயநிதி! தம்பியை உட்கார வெச்சு தாறுமாறா கேள்வி கேட்கிறாங்க: வெச்சு செய்த வில்லேஜ் மக்களும், வெந்து நொந்த நிர்வாகிகளும்.

By Vishnu PriyaFirst Published Feb 11, 2019, 3:51 PM IST
Highlights

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் நமக்கு நாமேஎன மாவட்டம் மாவட்டமாய் நடந்து சென்று வாக்காளர்களை கவர் செய்தார் ஸ்டாலின். இதோ நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ’ஊராட்சி சபைக்கூட்டம்எனும் பெயரில் உட்கார்ந்து உட்கார்ந்தே ஓட்டுக்களுக்கு அடி போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஊராட்சி சபையில் புண்ணான உதயநிதி! தம்பியை உட்கார வெச்சு தாறுமாறா கேள்வி கேட்கிறாங்க: வெச்சு செய்த வில்லேஜ் மக்களும், வெந்து நொந்த நிர்வாகிகளும்.

கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் ‘நமக்கு நாமே’ என மாவட்டம் மாவட்டமாய் நடந்து சென்று வாக்காளர்களை கவர் செய்தார் ஸ்டாலின். இதோ நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், ’ஊராட்சி சபைக்கூட்டம்’ எனும் பெயரில் உட்கார்ந்து உட்கார்ந்தே ஓட்டுக்களுக்கு அடி போட்டுக் கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் மட்டுமல்ல, தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாவட்டத்தை, ஊரை பிரித்துக் கொடுத்து ஊராட்சி சபை கூட்டங்கள் போய்க் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஸ்டாலினின் மகனான உதயநிதியும் தேனி மாவட்டத்தில் துவங்கி அப்படியே தூத்துக்குடி என்று தென் மாவட்டங்களில் சுற்றுப் பயணத்தில் இருக்கிறார்.

சமீபத்தில் தூத்துக்குடியில் ஊராட்சி சபையில் உட்கார்ந்த உதயநிதியிடம், பரமேஸ்வரி எனும் பெண் “எல்லா சாதி  தலைவர்களுக்கு மாலை போடுறீக, கும்பிடுறீக தி.மு.க. நிர்வாகிங்க. ஆனா எங்களோட தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை மட்டும் தவிர்க்குறீங்க. இம்மானுவேல் சேகரன், சுந்தரலிங்கம் சிலைகளுக்கு மாலை போட ஏன் மறுக்குறீங்க?” என்று நெத்தியடியாக கேட்டிருக்கிறர். அடுத்து முகேஷ் எனும் இளைஞர் “எங்களுக்குன்னு இருந்த இட ஒதுக்கீட்டில் மூணு சதவிகிதத்தை அருந்ததியருக்கு உள் இட ஒதுக்கீடாக உங்க தாத்தா கொடுத்துட்டார். இதனால நாங்க படிப்பு, வேலையில வாய்ப்பில்லாம நொந்து கிடக்குறோம்.” என்றிருக்கிறார். இப்படி ஆளாளுக்கு கம்பு சுற்ற ஆரம்பிக்க, உதயநிதியோ பேஜாராகிவிட்டாராம். என்ன சொல்வதென்றே புரியவில்லை.

அருகிலிருந்த கழக நிர்வாகிகளுக்கும் ஒரே ஃபீலிங்ஸ். இப்படி தாறுமாறா கேள்விகேட்டு தம்பி முதுகை புண்ணாக்குறாங்களே! என்று பொங்கி வெதும்பிவிட்டனராம். ஆனாலும் கவலையேபடாமல் அடுத்த கேள்விக்கு கூட்டம் ரெடியாக, “எந்த சமுதாயத்துக்கும் தி.மு.க. சொந்தமானதில்லை. உங்க கோரிக்கையை தலைவர் ஸ்டாலினிடம் சொல்றேன். அவர் முதல்வரானதும் உங்க கோரிக்கை நிறைவேற்றப்படும்.” என்று சொல்லிவிட்டு கிளம்பியிருக்கிறார்.

அடுத்த ஊரில் எதைக் கேட்பார்களோ? என்கிற பயம்தான் உதயநிதியை ஓவராய் ஆட்டியிருக்கிறது. பாவம்!

click me!