நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேமுதிக கட்சியை பலப்படுத்தும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
தேமுதிக சார்பில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட்ட உள்ள நிலையில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தேமுதிக கட்சியை பலப்படுத்தும் வகையில் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.
undefined
கடந்த சில நாட்களுக்கு முன் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்ட நிலையில் இன்று தேமுதிக ஐடி விங் உருவாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தேமுதிகவில் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்போர் பட்டியல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின், தேமுதிக செய்தித் தொடர்பாளராக M.V.S.ராஜேந்திரநாத் அவர்கள் (செல் நம்பர்: 9952052200) இன்று (10.03.2024) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு தலைமை கழக நிர்வாகிகள், மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி, வார்டு, ஊராட்சி, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகம் வளர்ச்சியடைய பாடுபடவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மாஸ் காட்டும் பிரேமலதா விஜயகாந்த்.. தேமுதிகவில் ஐ.டி. விங் உருவாக்கம்.. நிர்வாகிகள் நியமனம்!
அதேபோல் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தொலைக்காட்சிகளில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்க தொலைக்காட்சி விவாத குழு இன்று (10.03.2024) முதல் நியமனம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. கட்சியை பலப்படுத்த அதிரடி முடிவு எடுத்த பிரேமலதா விஜயகாந்த்.!