
தேனியில் குடும்பப் பிரச்சனையில் தாயை மண் வெட்டி கணையால் அடித்தே கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.
தேனி அல்லிநகரம், மண்டுகருப்பசாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் பெரியகருப்பன் மகன் சதீஷ் என்ற சதீஷ்வரன் (24). இவர், கடந்த 11.4.2015 அன்று குடும்பப் பிரச்சனையில் தனது தாயார் வீரம்மாளை (43) மண் வெட்டி கணையால் அடித்துக் கொலை செய்தாராம். இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவலர்கள் வழக்குப் பதிந்து சதீஷ்வரனை கைது செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எம்.எம்.கிருஷ்ணன், தாயை அடித்துக் கொலை செய்ததாக சதீஷ்வரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.