
திருச்சி
உரிய சான்று இல்லாமல் மணல் சேமித்து வைத்திருந்தால் கூட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தராஜூலு தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம், லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் கோவிந்தராஜூலு நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்று அளித்தார்.
அதில், "லால்குடி வருவாய்க் கோட்டாட்சியர் எல்லைக்கு உள்பட்டது லால்குடி, மண்ணச்சநல்லூர் போன்ற பகுதிகள்.
இந்தப் பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறோம்.
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் சேமிப்பாக உள்ள மணல் குறித்து விசாரித்தபோது அதை வீடு கட்ட விலைக்கு வாங்கியுள்ளோம் என்று கூறுகின்றனர்.
அவ்வாறு சேமித்துள்ள மணலுக்கு உரிய சான்று இல்லையென்றால் அதனை பறிமுதல் செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் எச்சரித்தார்.