ஜி.எஸ்.டியை எதிர்த்து விசைத்தறி தொழிலாளர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு…

Asianet News Tamil  
Published : Jul 06, 2017, 07:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:51 AM IST
ஜி.எஸ்.டியை எதிர்த்து விசைத்தறி தொழிலாளர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு…

சுருக்கம்

Lecturers protest against GST announcement of hunger strike tomorrow

திருநெல்வேலி

ஜி.எஸ்.டியை எதிர்த்து சங்கரன்கோவிலில் விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர். அவர்கள் நாளை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என்று அறிவித்துள்ளனர். நேற்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தால் ரூ.1 கோடி துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது.

இதில் சங்கரன்கோவில் நகரில் மட்டும் ஐந்தாயிரத்திற்குக்ம் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் உள்ளன. இங்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சங்கரன்கோவில் விசைத்தறிக் கூடங்களில் சேலை, கைலி, துண்டு. வேட்டி ஆகிய துணி வகைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கிருந்து சேலம், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறுப் பகுதிகளுக்கும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் துணி வகைகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சங்கரன்கோவிலில் நாள் ஒன்றிற்கு ரூ.1 கோடி மதிப்பிலான துணிகள் உற்பத்திச் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை அமலுக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த வரி விதிப்பைக் கண்டித்து கடந்த மாதம் ஜூன் 15–ஆம் தேதி விசைத்தறி உற்பத்தியாளர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து 27, 28, 29 ஆகிய மூன்று நாள்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு நாள்கள் நடந்த இந்தப் போராட்டத்தினால் சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம், திருமுருகன் சிறு விசைத்தறி கூலி தொழிலாளர் சங்கம், விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம், சிந்தாமணி வட்டார விசைத்தறி நெசவாளர் சங்கம், சுப்புலாபுரம் அறிஞர் அண்ணா சிறு விசைத்தறி உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் நேற்று முன்தினம் இரவு ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

அதில் ஜி.எஸ்.டி.யால் விசைத்தறி தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. விசைத்தறி தொழிலுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து முழு விலக்கு தரும்படி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அதன்படி விசைத்தறி தொழிலாளர்கள் நேற்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்கினர். இதனால் சங்கரன்கோவிலில் விசைத்தறிகள் எதுவும் இயங்கவில்லை.

வேலை நிறுத்தப் போராட்டத்தினால் நேற்று முதல் மட்டும் ரூ.1 கோடி மதிப்பிலான துணி உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் நாளை (வெள்ளிக்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது, 8–ஆம் தேதி முதலமைச்சரை சந்திப்பது, 10–ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம், கடை அடைப்பு, சாலைமறியல் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று விசைத்தறி சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் திமுகவினால் 25 இடங்கல் கூட வெற்றிபெற முடியாது ! நிர்மல் குமார் பேட்டி
எவ்வளவு சொல்லியும் கேட்காத அக்கா! ஆத்திரத்தில் தம்பி! அலறிய சுமித்ரா! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்.!