
இராமநாதபுரம்
இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் பயிர்க் காப்பீடு செய்வதற்கு நாளைதான் கடைசி நாள் என்று மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ். நடராஜன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், "பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 67 ஆயிரம் விவசாயிகள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுச் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், பொது சேவை மையங்கள் மூலம் காப்பீடு செய்துள்ளனர்.
இந்த மாதம் 30-ஆம் தேதி காப்பீடு செய்வதற்கு கடைசி நாளாகும் என இந்திய வேளாண் காப்பீட்டு நிறுவனம் அறிவித்திருக்கிறது.
எனவே, அனைத்து காப்பீடு தொடர்பான ஆவணங்களும் நிறுவனத்துக்கு அனுப்ப வேண்டியது இருப்பதால் விவசாயிகள் அனைவரும் நெற்பயிருக்கு நவம்பர் 28-ஆம் தேதிக்குள் (அதாவது நாளை) காப்பீடு செய்து பயன்பெற வேண்டும்" என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.