சாகித்ய அகாடெமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்…ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து

Asianet News Tamil  
Published : Jan 21, 2017, 04:59 AM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
சாகித்ய அகாடெமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்…ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து

சுருக்கம்

சாகித்ய அகாடெமி விருதை திருப்பி அளித்த எழுத்தாளர்…ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு போட்டி நடத்த சாதகமான நடவடிக்கைகள் ஏதும் மத்தியஅரசு எடுக்கவில்லை என்று கூறி, சாகித்யஅகாடெமி ‘யுவ புரஸ்கார்’ விருது  பெற்ற லட்சுமி சரவணக் குமார் தனது விருதை நேற்று திருப்பி அளித்தார்.

கானகன் நாவலுக்காக கடந்த ஆண்டு லட்சுமி சரவணக் குமாருக்கு சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையால் தொடர்ந்து 3 ஆண்டாக நடத்தமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடத்திய தீர வேண்டும் என்ற முடிவில் இளைஞர்கள் தொடர்ந்து 4-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்தியஅரசு சார்பில் அவசரச்சட்டம் கொண்டு வர இயலாது எனத் தெரிவித்து கைவிரித்து விட்ட நிலையில், மாநில அரசு சார்பில் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், சாகித்ய அகாடெமியின் யுவ புரஸ்கார் விருது  பெற்ற லட்சுமி சரவணக் குமார் தனது விருதை நேற்று திருப்பி அளித்தார். அவர் கூறுகையில், “ ஜல்லிக்கட்டு நடத்த மத்தியஅரசு எந்த விதமான ஆதரவான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கவில்லை. ஆதலால் எனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் சாகித்யஅகாடெமி விருதை திருப்பி அளித்தேன். என்னுடைய எதிர்ப்பு என்பது சாக்தியஅகாடெமிக்கு எதிரானது அல்ல. மத்தியஅரசுக்கு எதிரானதுதான்'' எனத் தெரிவித்தார்.

தமிழ்சமூகத்துக்கு நீண்ட காலமாகவே பல்வேறு விஷயங்களால் மத்திய அரசுகளால் துரோகம் இழைக்கப்பட்டு வருகிறது. இதில் ஜல்லிக்கட்டு போராட்டம் என்று நீண்டகாலமாக மக்கள் அனுபவித்த அடக்குமுறையின் வௌிப்பாடுதான். ஜல்லிக்கட்டு ஆதரவாக மத்தியஅரசு எந்தவிதமான சாதகமான முடிவும் எடுக்காததால், எனது விருதை திருப்பி அளிக்கிறேன் என்று பேஸ்புக்கில்நேற்றுமுன்தினம் சரவணக் குமார் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ் + ஓபிஎஸ் + டிடிவி.. புதுக்கோட்டை டூ திருச்சி பயணத்தில் அமித் ஷா போடும் மாஸ்டர் பிளான்
ஊதியம் கேட்கும் ஆசிரியர்களை தாக்கி கைது செய்வதா..? காவல் துறை மீது நடவடிக்கை எடுங்க – அன்புமணி கோரிக்கை