காங்கேயம் காளைகள் கொடுக்கும் பால் ஊட்டச்சத்து மிக்கது..கெட்ட கொழுப்பு இல்லாதது..சொல்லுது தந்தி டிவி

 
Published : Jan 20, 2017, 07:41 PM ISTUpdated : Sep 19, 2018, 03:00 AM IST
காங்கேயம் காளைகள் கொடுக்கும் பால் ஊட்டச்சத்து மிக்கது..கெட்ட கொழுப்பு இல்லாதது..சொல்லுது தந்தி டிவி

சுருக்கம்

காங்கேயம் காளைகள் கொடுக்கும் பால் ஊட்டச்சத்து மிக்கது..கெட்ட கொழுப்பு இல்லாதது..சொல்லுது தந்தி டிவி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தில் தடை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்தியயே தீ தீர வேண்டும் என்று இளைஞர்களும், மாணவர்களும் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின்போது ஜல்லிக்கட்டு தவிர விவசாயிகள் பிரச்சனையையும் கையில் எடுத்து போராடி வருகின்றனர். மேலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றால்தான் நாட்டு மாடுகளை காக்க முடியும் என்றும் போராடி வருகின்றனர்.

ஏற்கனவே நாட்டு மாடுகளை ஒழிக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் வெளிநாடுகளில் இருந்து ஜெர்ஸி பசுக்களை இறக்குமதி செய்கிறது

நேற்று முன்தினம்  ஸ்விட்சர்லாந்து நாட்டில் இருந்து, 540 ஜெர்ஸி இன பசுக்களை தமிழக அரசு இறக்குமதி  செய்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

இவை கதார் ஏர்வேஸ்க்குச் சொந்தமான சரக்கு விமானத்தில் ஸ்விட்சர்லாந்தில் இருந்து, சென்னை கொண்டுவரப்பட்டு, தமிழகக் கால்நடைத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாட்டு மாடுகளுக்கு பாதுகாப்பு அளிக்கவும், இறக்குமதி செய்யப்படும் பசுக்களுக்கு தடை விதிக்கவும் பேஸ் புக், டுவிட்டர் போன்ற பக்கங்களில் பொது மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

வெளிநாட்டு பசுக்களை விட காங்கேயம் வகை பசுக்கள் சிறந்தது என்பதை ஏராளமானோர் டுவிட்டர் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் தந்தி டிவியின் டவிட்டர் பக்கத்தில் காங்கேயம் மாடுகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள பதிவில், காங்கேயம் காளைகள் கொடுக்கும் பால் ஊட்டச்சத்து மிக்கது என்றும் கெட்ட கொழுப்பு இல்லாதது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காளைகள் எப்படி பால் கொடுக்கும் என நெட்சன்கள் தந்தி டிவி யை கலாய்த்து வருகின்றனர். மேலும் தந்தி டிவியின் இந்தப்பதிவு தற்போது வைரலாக பரவி வருகிறது

 

 

PREV
click me!

Recommended Stories

முதல்வரோடு முருகன் கைகோத்துள்ளார்..! ஸ்டாலினிடம் இருந்து முருகனை யாராலும் பிரிக்க முடியாது..! சேகர்பாபுவின் முரட்டு முட்டு..!
தனி அறையில் 45 வயது பெண்.. விடாமல் இரவு முழுவதும் 5 பேர்.! மறுநாள் மரணம்.. நடந்தது என்ன?