மழைக்குமுன் தூர்வாரப்படுமா ஏரிகள் அல்லது வெள்ளம் வந்து தூர்வாரட்டும் என்று காத்திருப்பா?

Asianet News Tamil  
Published : Oct 07, 2016, 01:09 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
மழைக்குமுன் தூர்வாரப்படுமா ஏரிகள் அல்லது வெள்ளம் வந்து தூர்வாரட்டும் என்று காத்திருப்பா?

சுருக்கம்

வடகிழக்குப் பருவமழை காலம் தொடங்கியுள்ள நிலையில் காஞ்சிபுரம் அருகே உள்ள ஏரிகளை தூர்வார வேண்டும் என விவசாயிகள் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை காலமாகும். இதைமுன்னிட்டு, அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

காஞ்சிபுரம் வட்டத்துக்கு உள்பட்ட பொன்னேரி கரை ஏரி, கீழம்பி ஏரிகள் நீரை சேமிக்கக் கூடிய திறன் கொண்டவை ஆகும்.

இந்த ஏரிகள் தற்போது புதர்மண்டி, கரைகளும் ஒழுங்கில்லாமல் உள்ளன.

இந்த நிலையில், காஞ்சிபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீரை சேமிக்கக் கூடிய திறன்கொண்ட ஏரிகளை தூர்வாரி, தயார் நிலையில் வைக்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவற்றை மழைக்குமுன் தூர்வாருவார்களா அல்லது கடந்த முறைப் போன்று வெள்ளமே அடித்துச் செல்லட்டும் என்று அலட்சியமாய் விட்டுவிடுவார்களா?

PREV
click me!

Recommended Stories

விஜய்யுடன் சேர்ந்தால் தான் உங்கள் 'கை' ஓங்கும்.. காங்கிரசுக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அட்வைஸ்!
சென்னையில் பேரதிர்ச்சி! பீகார் இளைஞரின் குடும்பத்தையே கருவறுத்த கொடூர கும்பல்..