அன்றைய முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரைவார்க்கபட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் குற்றம் சாட்டி உள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அலுவலகம் திறப்பு இன்று நடைபெற்றது. இதில் நீலகிரி மக்களவை தொகுதி பா. ஜ. க வேட்பாளரும், மத்திய இனை அமைச்சருமான எல். முருகன் கலந்து கொண்டு அலுவலகத்தில் நடந்த கணபதி பூஜையில் கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.
undefined
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல். முருகன், கச்சத்தீவு விவகாரத்தில் அனைத்தும் அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒப்புதலுடன் தான் தாரைவார்க்கபட்டுள்ளது. கச்சதீவு இலங்கைக்கு வழங்க சென்னையில் நடந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றுள்ளனர்.
காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்ற விவசாயி அடித்து கொலை; தஞ்சையில் பரபரப்பு
அப்போதைய முதல்வர் கருணாநிதி மற்றும் தலைமை செயலாளர் ஒப்புதலுடன் தான் கச்சத்தீவு தாரைவார்க்கபட்டது. அது குறித்து நமது வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உரிய ஆதாரங்களுடன் விளக்ககயுள்ளதை எல்.முருகன் சுட்டிக்காட்டினார். இதனால் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை மட்டும் 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற் படையால் சுட்டு கொல்லபட்டுள்ளனர்.
இதற்கு முழு காரணம், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு முழு பொறுப்பு அப்போதைய காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அரசு தான். இதனால் இன்று வரை நமது தமிழக மீனவர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே மீனவர்களின் இந்த நிலைக்கு திமுக மற்றும் காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என தெரிவித்தார்.