
குத்தாலம்
திருவாரூரில் திறந்து கிடந்த வீட்டுக்குள் புகுந்து பித்தளை மற்றும் எவர்சில்வர் குடங்களை திருடிய பெண்ணை அக்கம்பக்கத்தினர் வீரமாகப் பிடித்து காவலாளர்களிடம் ஒப்படைத்தனர்.
திருவாரூர் மாவட்டம், மயிலாடுதுறை அருகே அரிவேளூர் பிரதானச்சாலை பகுதியைச் சேர்ந்த முருகவேல் மனைவி நித்யா (36). இவர் நேற்று முன்தினம் தனது வீட்டை திறந்து வைத்த நிலையில் அருகில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.
அப்போது வீட்டில் இருந்த 2 பித்தளை குடம், ஒரு எவர்சில்வர் குடம் ஆகியவை காணாமல் போனது தெரிய வந்தது. உடனே வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார்.
அப்போது அந்த தெருவின் வழியாக ஒரு பெண், நித்யாவுக்குச் சொந்தமான 3 குடங்களையும் கையில் எடுத்து கொண்ட வேகமாக நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்.
உடனே நித்யா, அக்கம் பக்கத்தினரைச் உடன் சேர்த்துக் கொண்டு குடங்களை திருடிய பெண்ணை கையும், களவுமாக பிடித்தனர்.
பின்னர் அந்த பெண்ணை பெரம்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் காவலாளர்கள், அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்த பெண், தஞ்சை பர்மா காலனியைச் சேர்ந்த வேலாயுதம் மனைவி காளியம்மாள் (25) என்பதும், அவர் தெருக்களில் கிடக்கும் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை சேகரிக்கும் தொழில் செய்து வந்ததும், நித்யாவின் வீட்டுக்குள் நுழைந்து 3 குடங்களை திருடிச் சென்றதும் தெரிய வந்தது.
இதுகுறித்து பெரம்பூர் காவல் உதவி ஆய்வாளர் தமிழ்ச்செல்வி மற்றும் காவலாளர்கள் வழக்குப்பதிவுச் செய்த காளியம்மாளை கைது செய்தனர்.