கொடுங்கையூர் தீ விபத்து - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

Asianet News Tamil  
Published : Jul 23, 2017, 11:25 AM ISTUpdated : Sep 19, 2018, 12:55 AM IST
கொடுங்கையூர் தீ விபத்து - பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

சுருக்கம்

kodungayur fire killed 8

சென்னை கொடுங்கையூர் பேக்கரியில் நிகழ்ந்த  தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

கொடுங்கையூர் மீனாம்பாள் நகரில் உள்ள ஒரு பேக்கரியில் கடந்த 15 ஆம் தேதி நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தின் போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டிருந்த போது உள்ளே இருந்த சிலிண்டர் வெடித்தது.

அப்போது  தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஏகராஜ் தீயில் கருகி பலியானார். மேலும் 3தீயணைப்பு வீரர்கள், 6 போலீசார்கள் உள்பட 48 பேர் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தனர். இவர்கள் அனைவருக்கும் ஸ்டான்லி மற்றும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தீயில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பேக்கரியின் உரிமையாளர் ஆனந்தன், அவருடைய உறவினரான மகிலவன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பேக்கரியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்த நிலையில் பார்த்திபன் என்பவர் இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 10 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தீ விபத்தில் பலியான பேக்கரி உரிமையாளர் ஆனந்தன் மன்றும் அவரது உறவினர் மகிழவன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

4 லட்சம் ஆசிரியர்களுக்கு துரோகம்.. திமுக அரசு பழிவாங்கிவிடுச்சு.. அடுத்த ஆட்சியில் தீர்வு.. சொல்வது யார் தெரியுமா?
45+ வாக்கு வங்கி... புதிய கூட்டணியால் ஏறுமுகத்தில் அதிமுக..! 2021 தேர்தல் சொல்லும் அரசியல் கணக்கு..!