கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இறுதி கட்டத்தை எட்டும் விசாரணை

By Velmurugan sFirst Published Mar 21, 2023, 2:58 PM IST
Highlights

கொடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரசு தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதால் விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை தொடர்பான வழக்கின் விசாரணை உதகை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் தலைமையில் வழக்கு நடைபெற்றது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக கூறப்படும் சயான், வாளையார் மனோஜ் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். 

அரசு வழக்கறிஞர்களான ஷாஜகான் மற்றும் கனகராஜ் ஆகியோர் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக ஆஜராகினர். வழக்கின் விசாரணை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வழக்கை விசாரித்து வரும் சிபிசிஐடி காவல் துறையினர் “மேலும் சில சாட்சிகளிடம் விசாரணை நடத்தவுள்ள காரணத்தாலும், மின்னணு சார்ந்த தொலைத்தொடர்பு குறித்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டிய காரணத்தாலும் கூடுதல் அவகாசம் வேண்டும்” என்று அரசு தரப்பு வழக்கறிஞர் கேட்டுக் கொண்டார்.

வாயில் வெடி மருந்து வெடித்தது தான் யானையின் இறப்புக்கு காரணம்; மருத்துவர்கள் பரபரப்பு அறிக்கை

இதனைத் தொடர்ந்து மாவட்ட அமர்வு நீதிபதி முருகன் வழக்கின் விசாரணையை ஏப்ரல் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

click me!