'நான் டி.டி.வி.தினகரன் ஆதரவாளரா...?' மேத்யூஸ் அதிரடி விளக்கம்!

By vinoth kumarFirst Published Jan 23, 2019, 4:47 PM IST
Highlights

ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். என்னுடன் வரத் தயாரக இருந்த மருத்துவர்கள் வரத் தயங்குகிறார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது. சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் நான் ஆதரவிக்கவில்லை என்று மேத்யூ சாமுவேல் கூறினார்.

கோடநாடு விவகாரம் தொடர்பாக எனக்கு பின்னால் இருந்து யாரும் இயக்கவில்லை. நான் சென்னை வருவதற்கு அஞ்சவில்லை என மேத்யூ சாமுவேல் கூறியுள்ளார். 

கோடநாடு எஸ்டேட் கொலை விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘’கோடநாடு கொலைகள் தொடர்பாக அரசின் புலனாய்வு அமைப்புகள் தான் உண்மையை வெளிக்கொண்டு வரவேண்டும். பத்திரிக்கையாளர் என்கிற முறையில் கோடநாடு விவகார தகவல்களை திரட்டி இருக்கிறேன். 

தான் சொல்லிக் கொடுத்து சயன் மற்றும் மனோஜ் பேசவில்லை. கேரளாவில் இருக்கும் சயனை யார் வேண்டுமானாலும் பேட்டி எடுத்து கொள்ளலாம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் உள்ள மர்மங்கள் வெளிவரவேண்டும். ஆவணங்களை திருடிச் சென்றதற்கான காரணத்தை எடப்பாடி பழனிசாமி இன்னும் விளக்கவில்லை. கொலை, கொள்ளைக்கு பின்னால் இருப்பவர்களை பழனிசாமி தாமாக முன் வந்து கூறவேண்டும்.

 

ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மங்கள் வெளிவரவேண்டும். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களிடமும் பேட்டி எடுத்துள்ளேன். ஜெ.வுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அச்சத்தில் உள்ளனர். என்னுடன் வரத் தயாரக இருந்த மருத்துவர்கள் வரத் தயங்குகிறார்கள். ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் தீர்ப்பு முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு விட்டது. சசிகலாவையும் டி.டி.வி.தினகரனையும் நான் ஆதரவிக்கவில்லை என்று மேத்யூ சாமுவேல் கூறினார்.

click me!