பொங்கல் பரிசாக 1000 ரூபாய் எந்தெந்த ரேஷன் கார்டுகளுக்கு கிடைக்கும் தெரியுமா?

By Thiraviaraj RMFirst Published Jan 9, 2019, 1:35 PM IST
Highlights

அனைவருக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்குவதற்கு உயநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்தத் தடை பொறுந்தாது. இந்நிலையில் எந்தெந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 

அனைவருக்கும் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் வழங்குவதற்கு உயநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது. ஆனால், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இந்தத் தடை பொறுந்தாது. இந்நிலையில் எந்தெந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 1000 ரூபாய் கிடைக்கும் என்கிற தகவல் வெளியாகி இருக்கிறது. 
 
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. சென்னை உள்பட தமிழகத்தின் மற்ற இடங்களில் பொங்கல் பரிசு ரேஷன் கடைகளில் நேற்று முதல் இந்தப் பரிசுதொகை ரொக்கமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை வழங்குவதை நிறுத்தி வைக்க உத்தரவிடவேண்டும் என கோவையைச் சேர்ந்த டேனியல் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த மனு இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து உத்தரவிட்ட நீதிபதி, ’பொங்கல் பரிசாக 100 ரூபாய் வழங்கக் கூடாது. வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பரிசு வழங்க வேண்டும். வசதியானவர்களுக்கு கொடுக்கும் பணத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கும் சாலை போடுவதற்கும் பயன்படுத்தலாம். எதற்காக பொங்கல் பரிசு தரப்படுகிறது?

அரசு பணத்தை பணக்காரர்களுக்கு கொடுப்பது ஏன்? பொங்கல் பரிசு என்ற பெயரில் வாரி வழங்கும் பணம் கட்சிப்பணமா? நீதிபதிகளுக்கும் தலைமை வக்கீலுக்கும் எதற்கு பொங்கல் பணம்? எப்படி இதனை அரசின் கொள்கை முடிவு என ஏற்றுக்கொள்வது? அரசியல் கட்சியினரின் பணம் என்றால் தாராளமாக செலவழிக்கட்டும். பரிசுத் தொகை யாருக்கு போய் சேர வேண்டும் என்பதை வகைப்படுத்திய பிறகே வழங்கி இருக்க வேண்டும். வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கக் கூடாது. ஆனால், வழக்கம்போல அரிசி, பருப்பு உள்ளிட்டவை வழங்க தடையில்லை. 

அதன்படி NPHH, NPHHS ரேஷன் கார்டுகள் வைத்திருப்பவர்களுக்கு பொங்கல் பரிசு பணம் கிடைக்காது. NPHHC கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே பொங்கல் பணம் கிடைக்கும்’’ என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

click me!