நீ பாதி - நான் பாதி...! மேடையில் தாறுமாறாக கிரண்பேடியை கலாய்த்த நாராயணசாமி..! வீடியோ பாருங்க..!

 
Published : May 11, 2018, 03:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
நீ பாதி - நான் பாதி...! மேடையில் தாறுமாறாக கிரண்பேடியை கலாய்த்த நாராயணசாமி..! வீடியோ பாருங்க..!

சுருக்கம்

kiranbedi and narayanasami both insulting each other in the stage

நீ பாதி - நான் பாதி...! மேடையில் கிரண்பேடி நாராயணசாமி ஒரே கொஞ்சல்ஸ்..!

புதுவையில் எலியும் பூனையுமாக இருக்கும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி இருவரும் ஒரே மேடையில் ஏட்டிக்கு போட்டியாக  மாறி மாறி  பேசிய  சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது.

கிண்பெடியை பொறுத்தவரையில், ஆளுநர் என்பதையும்  மீறி, முதல்வர் போன்று செயல்படுபவர். ஆனால் ஏதோ வகையில் முதல்வரையே பீட் பண்ற  மாதிரி செயல்களில் ஈடுபடுவார்.

ஆனால் நாராயணசாமியோ மத்திய அரசை தீவிரமாக எதிர்க்க கூடியவர்...துணை நிலை ஆளுநர் கிரண்பேடி  மத்தியில் ஆளும் பாஜகவிற்கு ஆதரவாக செயல்படுவதை முதல்வர் நாராயணசாமி  நேரடியாக எதிர்பார்.

உதாரணம் 

சமீபத்தில் தூய்மையான கிராமம் சான்றிதழ் பெற்றால் மட்டுமே, இனி பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்றும், சான்றிதழ் பெறாத கிராமங்களில் இலவச அரிசி வழங்கப்படாது என்றும் அறிவித்தார்.

கிரண்பேடியின் முடிவுக்கு காங்கிரஸ், திமுக, மார்க்சிஸ்ட், அதிமுக ஆகிய கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில், தமது உத்தரவை நிறுத்திவைப்பதாக கிரண்பேடி தெரிவித்தார்.இது போன்று எந்த ஒரு  திட்டத்தையும் கிரண் பேடி கொண்டு வந்தால் அதனை எதிர்ப்பதில் முதல் ஆளாக இருப்பவர் தான் முதல்வர் நாராயண சாமி

பாம்பும் கீரியும்

எப்போதும் பாம்பும் கீரியுமாக இருக்கும் கிரண்பேடி மற்றும் நாராயணசாமி நேற்று நடைப்பெற்ற  கம்பன் கழக விழாவில் கலந்துக் கொண்டனர்.

கிரண்பேடி பேசுகையில், பேசுவதை மொழிபெயர்க்க முதல்வர் நாராயணசாமியை அழைக்கிறார்.

அவரும், கிரண்பேடி அருகாமையில் வந்து நிற்கிறார்.பின்னர்  இருவரும் ஏட்டிக்கு போட்டியாக  பேசுவதும், முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தொகை வழங்கப்படும் என கிரண்பேடி  அறிவிப்பதும், அதனை சற்று கிண்டலாக நாராயணசாமி தமிழில் மொழிப் பெயர்ப்பதும் அப்படியே சுவாரஸ்யம் தாங்க முடியாமல் மக்கள்  மகிழ்ச்சியாக  சிரிக்க தொடங்கி விட்டனர்.  

PREV
click me!

Recommended Stories

நாளுக்கு நாள் முற்றும் செவிலியர்களின் போராட்டம்.. அதிகாரத் திமிரில் ஆட்டம் போடும் திமுக.. அன்புமணி ஆவேசம்
ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!