குழந்தை கடத்தல் கும்பல் முகாமிட்டுள்ளதாக வதந்தி பரப்பிய நபர் கைது..!

 
Published : May 11, 2018, 12:41 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
குழந்தை கடத்தல் கும்பல் முகாமிட்டுள்ளதாக வதந்தி பரப்பிய நபர் கைது..!

சுருக்கம்

a person arrested who spreaded babe kidnapped gossip news

திருவண்ணாமலையில் குழந்தை கடத்தல் கும்பல் முகாமிட்டுள்ளதாக வதந்தி பரப்பிய நபரை கைது செய்தது போலீஸ்.

தமிழகத்தில் குழந்தைகளை கடத்த வடமாநிலங்களில் இருந்து பலர் வந்திருப்பதாக வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது.

இந்த வதந்தியை உண்மை என்று நம்பி வட மாநிலத்தவர்கள், மன நலம் பாதித்தவர்கள், சுற்றுலாப் பயணிகளை வட மாவட்டங்களில் கிராம மக்கள் தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது

நேற்று முன் தினம் திருவண்ணாமலையில் குல தெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ருக்மணி என்கிற மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து வாட்ஸ் ஆப்பில் குழந்தை கடத்தல் கும்பல் தொடர்பாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதிகளில் குழந்தைகளை கடத்த 100 பேர் வந்திருப்பதாக பேசி வீடியோ ஒன்றை வாட்ஸ் ஆப்பில் புரிசை கிராமத்தை சேர்ந்த வீரராகவன் என்ற இளைஞரை பகிர்ந்துள்ளார்.

இந்த இளைஞரை கைது செய்த போலீசார், இது போன்ற தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நபர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பக்தர்களுக்கு ஷாக்கிங் நியூஸ்! பழனி முருகன் கோவில் நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாட்டிற்கு தனி கேரக்டர் உள்ளது..! பீகார் மாதிரி இல்லை.. அமித்ஷாவுக்கு உதயநிதி சொன்ன ஸ்ட்ராங் மெசேஜ்