
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் தேறி வருகிறது என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலில் அலர்ஜி காரணமாக கொப்பளங்கள் ஏற்பட்டன. இதனால், அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவரது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளதாக தெரிகிறது.
டாக்டர்கள் தொடர்ந்து அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக கருணாநிதியின் உடலில் ஏற்பட்டுள்ள கொப்பளங்கள் குறைந்துள்ளன. டாக்டர்கள் ஆலோசனையின் பேரில் கருணாநிதி வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி வழக்கமாக சாப்பிடும் மருந்துகளில் ஒன்று, அவரது உடல்நிலைக்கு ஏற்கவில்லை. இதனால், அவருக்கு அலர்ஜி ஏற்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதல், அவர் தொடர்ந்து ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள், கேட்டுக்கொண்டுள்ளார்கள். எனவே கட்சிக்காரர்கள், பார்க்க வருவதை தவிர்க்க வேண்டும் என திமுக தலைமை கழகம் அறிவித்தது.
இந்நிலையில் கருணாநிதிக்கு, டாக்டர்கள் தொடர் சிகிச்சை அளிக்கின்றனர். இதன் காரணமாக அவருடைய உடல்நிலை தேறி வருகிறது. அவருக்கு ஓய்வு தேவை என்பதால் யாரும் வந்து கருணாநிதியை பார்க்கவேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.