ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அதிரடி கைது... -வெளிநாடு சென்று இந்தியா திரும்பியதும் சிபிஐ நடவடிக்கை...!

Asianet News Tamil  
Published : Feb 28, 2018, 09:15 AM ISTUpdated : Sep 19, 2018, 02:00 AM IST
ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அதிரடி கைது... -வெளிநாடு சென்று இந்தியா திரும்பியதும் சிபிஐ நடவடிக்கை...!

சுருக்கம்

karthi chithambaram arrested by cbi

ஐஎன்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். 

ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு வெளிநாட்டு முதலீட்டை அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் மூலம் கார்த்தி சிதம்பரம் சட்டவிரோதமாகப் பெற்றுத் தந்தார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இது தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதனிடையே, தனது மகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்க்க டிசம்பர் 2-ஆம் தேதி பிரிட்டன் செல்ல வேண்டுமென்று கார்த்தி அனுமதி கோரினார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என்று சிபிஐ தரப்பு வலியுறுத்தியது. 

ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ். மீடியா, அதன் இயக்குனர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி ஆகியோர் மீது சி.பி.ஐ. அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

கார்த்தி சிதம்பரம், வழக்கு விசாரணையில் ஆஜராகாததால், கண்காணிக்கப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை வெளியிட்டது.  

இதனை தொடர்ந்து இதை ரத்து செய்யக்கோரி, கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இதுனையடுத்து வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி அளிக்கும்படி கார்த்தி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் வரும் 28-ம் தேதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு அனுமதி வழங்கியது. 

மேலும், வெளிநாட்டில் கார்த்தி சிதம்பரம் தங்கும் இடங்கள் உள்ளிட்ட விவரங்களை சி.பி.ஐ.க்கு அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்தனர். 

அதன்படி வெளிநாடு சென்று விட்டு இந்தியா திரும்பினார். அவர் இந்தியா வந்ததும் சிபிஐ அதிகாரிகள் உடனே அவரை கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

தேமுதிக அலுவலகத்தில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது
தூத்துக்குடி 12ம் வகுப்பு பள்ளி மாணவி கொலை வழக்கு! பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி.! கேட்டதும் கதறும் தந்தை!