நாளை காணும் பொங்கல்..!! - சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்

Asianet News Tamil  
Published : Jan 15, 2017, 12:30 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
நாளை காணும் பொங்கல்..!! - சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்

சுருக்கம்

காணும் பொங்கல் நாளை தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மக்கள் கடற்கரை, பூங்கா, அருவிகள், சுற்றுலாத் தலங்களுக்கு தங்கள் குடும்பத்துடன் சென்று கொண்டாடுவார்கள், காணும் பொங்கலை தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களில் திரும்பும் பக்கம் எல்லாம் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும்.

சென்னையில் காணும் பொங்கலையொட்டி சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அருகில் உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்களும் கார், வேன்களில் மெரினா கடற்கரைக்கு கூட்டமாக வருவார்கள். அதனால் கடற்கரையில் மண் தெரியாத அளவுக்கு கூட்டத்தை காணமுடியும். 

கடற்கரையில் சிறுவர் முதல் முதியவர்கள் வரை பலரும் தங்களுக்கு பிடித்த விளையாட்டுகளையும், இளம்பெண்கள் கபடி, பாண்டி, பலூன் உடைத்தல் ஆகிய விளையாட்டுகளையும், சிறுவர் சிறுமியர் கடற்கரையில் உள்ள ராட்டினத்தில் ஏறியும் விளையாட்டுகளையும், களைப்பாக இருந்தால் வீடுகளில் இருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை கடற்கரையில் அமர்ந்து குடும்பமாக சாப்பிடுவர்கள். மேலும் கடற்கரையில் உள்ள பஜ்ஜி, மீன் வறுவல்  மீன் விற்பனை படுஜோராகவும் ஆர்டர் அளித்துவிட்டு மக்கள் அரை மணிநேரம் காத்திருக்க வேண்டிய அளவுக்கு கிராக்கி இருக்கும்.

மெரீனாவில் உழைப்பாளர் சிலையில் இருந்து கலங்கரை விளக்கம் வரையில் மணல் பரப்பில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்களில் நின்றபடி, 3 போலீசார் கூட்டத்தை கண்காணிக்க உள்ளனர்.காணும் பொங்கல் நாளில் இளைஞர்கள் உற்சாக மிகுதியில் கடலில் இறங்கி குளிப்பார்கள். அப்போது ஆபத்தை உணராமல் ஆழ்கடலுக்குள் சென்று அலையில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களும் நடைபெறும். 

இதுபோன்ற அசம்பாவிதங்களைத் தடுக்க கடலில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கடலில் இறங்குவதைத் தடுப்பதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்பு வேலிகளும் அமைக்கப்பட உள்ளன. குதிரைப்படை வீரர்களும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். போலீசார் கடற்கரை மணலில் எளிதாக செல்லக்கூடிய 10 நான்கு சக்கர வாகனங்களில் ரோந்து பணிகள் செய்ய உள்ளனர்,

எலியட்ஸ் கடற்கரை, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பொதுழுபோக்கு பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா, வண்டலூர் வண்டலூர் உயிரியல் பூங்கா தற்போது மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் வீட்டில் இருந்து சினிமா, தொலைக்காட்சியை கண்டுகளிக்கலாம். 

திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானலிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் அங்குள்ள பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன் ஃபாரஸ்ட், குணா குகை, மக்கள் அதிகம் வருவர், 

கன்னியாகுமரியில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, திரிவேணி சங்கமம், காந்தி மண்டபம், சூரியோதயம், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, சிதறால் மலைக்கோவில்,

தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், மணப்பாடு, உவரி, தூத்துக்குடி கடற்கரை, ரோச் பூங்கா, எட்டையாபுரம், பாஞ்சாலங்குறிச்சி, ஆகிய இடங்களிலும், 

திருவண்ணமலை மாவட்டத்தில் சாத்தணூர் அணை, அண்ணாமலையார் கோவில், தேனி மாவட்டத்தில் வைகை ஆணை, குமளி, தேவராம், தேக்கடி, போடி மெட்டி ஆகிய இடங்களிலும்,

இதைப்போல் ஊட்டி, ஏற்காடு, ஆகிய சுற்றுலாத்தளங்களில் ஏராளமான மக்கள் வருவார்கள் என்பதால் அந்த பகுதிகளில் தற்காலிக உதவி மையங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட போலீசார் செய்து வருகின்றனர்.  

PREV
click me!

Recommended Stories

நீலாங்கரை இல்லம் திரும்பிய தவெக தலைவர் Vijay...
இந்த தேர்தலில் விசில் அடிப்பவர்களை தியேட்டருக்கு அனுப்பிவிடலாம் ..! அரியலூரில் சீறும் திருமாவளவன்!