அமைச்சர்களுக்கு ஷாக் கொடுப்பாரா நீதிபதி.? சொத்து குவிப்பு வழக்கில் இன்று முக்கிய முடிவு

By Ajmal KhanFirst Published Jan 8, 2024, 10:42 AM IST
Highlights

தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி,  கேகேஎஸ்எஸ்ஆர். தங்கம் தென்னரசு ஆகியோர் மீதான சொத்து வழக்குகளை எப்போது விசாரிக்க தொடங்குவது என்பதி குறித்து முக்கிய முடிவை இன்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷன் அறிவிக்கவுள்ளார். 
 

மீண்டும் விசாரணையில் அமைச்சர்களின் வழக்குகள்

சொத்துக்கு குவிப்பு வழக்கில் தமிழக அமைச்சர்களுக்கு அடுத்தடுத்து சிக்கல் உருவாகி வருகிறது. அந்த வகையில் கிழமை நீதிமன்றத்தில் விடுவிக்கப்பட்ட அமைச்சர்களின் பட்டியலை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கையில் எடுத்துள்ளார். அந்த வகையில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஐ பெரியசாமி மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர்களின் வழக்குகளையும் தூசி தட்டப்படுள்ளது. இதனிடையே கடந்த அக்டோபர் மாதம் சுழற்சி முறையில் மதுரை உயர் நீதிமன்றக் கிளைக்கு ஆனந்த் வெங்கடேசன் மாற்றப்பட்டார்.

Latest Videos

விசாரணை எப்போது தொடங்கும்.?

இதன் காரணமாக சற்று நிம்மதி அடைந்திருந்த அமைச்சர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில், மதுரைக்கு மாற்றாலாகி சென்றிருந்த ஆனந்த் வெங்கடேசன், மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தற்போது வந்துள்ளார். எம்.பி, எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் பொறுப்பு மீண்டும் அவரிடமே ஒப்படைக்கப்பட்டது. சொத்து குவிப்பு மறு ஆய்வு வழக்குகளையும் அவரே விசாரிக்கவுள்ளார். இந்தநிலையில் தமிழக அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்குகளை இறுதிக்கட்ட விசாரணைக்காக எந்த நாட்களில் விசாரணைக்கு எடுக்கலாம்? என்பது குறித்து இன்று நீதிபதி முடிவு செய்ய உள்ளார். 

இதுகுறித்து இன்று பிற்பகல் 2 மணிக்கு பிறகு நடைபெறும் விசாரணையின் போது அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையினர் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கேட்டறிவார் என தெரிகிறது. இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்

நாடாளுமன்ற தேர்தல் மட்டுமில்லை சட்டமன்றத்திலும் கூட்டணி இல்லை..! பாஜகவிற்கு ஷாக் கொடுத்த எடப்பாடி

click me!