சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னை புத்தக கண்காட்சி பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளதன் காரணமாக இன்று புத்தக கண்காட்சி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சிக்கு சிக்கல்
47 ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கடந்த 3 ஆம் தேதி அமைச்சர் உதயிநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வருகிற 21 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த புத்தக கண்காட்சி விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறவுள்ளது. மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரை நடைபெறும்.
19 நாட்கள் நடைபெறவுள்ள புத்தகக் காட்சியில் நடைபெறுகிறது மொத்தம் 900 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து நூல்களுக்கும், அனைத்து அரங்கிலும் வழங்கப்படுகிறது. 10% தள்ளுபடியும் வழங்கப்பட்டு வருகிறது.கடந்த ஒரு வாரமாக சிறப்பாக நடைபெற்று வந்த புத்தக கண்காட்சியில் தினந்தோறும் பல ஆயிரம் பேர் குவிந்து வந்தனர்.
மழையால் புத்தக கண்காட்சி பாதிப்பு
இந்தநிலையில் வட கிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் சென்னையில் நேற்று மாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. இதே போல புத்தக கண்காட்சி நடைபெறும் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்திலும் அதிகளவு மழை நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக புத்தக அரங்குகளில் மழை நீர் உள்ளே வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
புத்தக கண்காட்சிக்கு விடுமுறை
மேலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் புத்தகங்களும் மழை நீரில் சேதம் ஏற்படும் நிலை உருவானது. இதனையடுத்து சென்னை புத்தக கண்காட்சி இன்று நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் வந்து செல்வதில் ஏற்படும் சிரமங்களுக்காக இன்று 08/01/2024 ஒரு நாள் மட்டும் புத்தகக் காட்சிக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. நாளை வழக்கம் போல புத்தகக் காட்சி செயல்படும் என கூறியுள்ளது.
இதையும் படியுங்கள்