கல்யாணத்துக்கு கூட கூப்பிடலயாம் நமிதா! எவ்ளோதான் அசிங்கப்படுறது! குமுறும் ஜூலி!

Asianet News Tamil  
Published : Nov 27, 2017, 02:49 PM ISTUpdated : Sep 19, 2018, 01:30 AM IST
கல்யாணத்துக்கு கூட கூப்பிடலயாம் நமிதா! எவ்ளோதான் அசிங்கப்படுறது! குமுறும் ஜூலி!

சுருக்கம்

Julee Distress

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை நமிதா, குஜராத்தை சேர்ந்த இவர் தமிழில் விஜயகாந்த் நடித்த 'எங்கள் அண்ணா' திரைபடத்தின் மூலம் அறிமுகமாகினார். இந்தப் படத்தைத் தொடர்ந்து சரத்குமாருடன் இவர் நடித்த ஏய்
படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

இதனால் இவருக்கு தமிழ்ப் படங்களில் நடிக்க அதிக வாய்புகள் கிடைத்தன. அஜித்துடன் பில்லா, விஜயுடன் அழகிய தமிழ் மகன் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

உடல் எடை காரணமாக சில காலம் குறிப்பிட்ட தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர், சின்னத்திரை நடன நிகழ்ச்சி நடுவர் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு ஒரு சில சர்ச்சைகளுக்கு ஆளானார்.

இந்நிலையில் கடந்த மாதம் இவர் தயாரிப்பாளரும், நடிகருமான 'வீரா' என்கிற வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார். அதன்படி நமிதாவின் திருமணம் இன்று திருப்பதியில் உள்ள இஸ்கான் 'கிருஷ்ணர்  கோயிலில்' கோலாகலமாக வீராவின் குடும்ப
வழக்கப்படி நடந்தது.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நமீதா 100-வது நாள் நிகழ்ச்சியில்கூட கலந்து கொள்ளவில்லை. அங்கிருந்து கிளம்பிச் சென்றதோடு பிக் பாஸ் தொடர்பான எந்த நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில்தான், நமீதா தனது காதலர் வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்து கொண்டார். 

இந்த திருமண நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஆர்த்தி, காயத்ரி, சக்தி ஆகியோர் மட்டுமே கலந்து கொண்டனர். பிக்பாஸ் வீட்டில் இருந்து ஜூலி கலந்து கொள்ளவில்லை. எந்த விஷயமாக இருந்தாலும் ஆர்வத்துடன் கலந்து கொள்ளும் ஜூலி, ஏன் நமீதாவின் திருமணத்துக்கு செல்லவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். நெட்டிசன்கள் கேள்விக்கு பதிலளித்த ஜூலி, தனக்கு அழைப்பு விடுக்காததால் தான் செல்லவில்லை என்று தெரிவித்திருந்தார்.

PREV
click me!

Recommended Stories

சபிக்கப்பட்ட தற்காலிக ஊழியர்கள்..? மின்வாரிய ஊழியருக்கு இழப்பீடு வழங்க அன்புமணி கோரிக்கை..
திருப்பரங்குன்றதில் தடை போட நீங்கள் யார்..? தண்டனை கொடுக்க சிவன் இருக்கிறான்!" வெடித்த தர்மேந்திர பிரதான்..!