சென்னை வன்முறை.... விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வு நீதிபதி ராஜேஷ்வரன் நியமனம்

Asianet News Tamil  
Published : Feb 01, 2017, 10:30 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
சென்னை வன்முறை....  விசாரணை கமிஷன் தலைவராக ஓய்வு நீதிபதி ராஜேஷ்வரன்  நியமனம்

சுருக்கம்

வன்முறை குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 வது விதியின் கீழ் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார். அதன் படி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டி நடத்தப்பட்ட போராட்டங்களின் தொடர்ச்சியாக கடந்த 23. அன்று சென்னை, மதுரை, கோவை மற்றும் தமிழகத்தின் இதர பகுதிகளில்  நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளின் உரிய காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை விசாரிப்பதற்கு தனி விசாரணை ஆணையம்  அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஓபிஎஸ் அறிவித்தார். 

இதன்படி ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் விசாரணை ஆணைய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ராஜேஷ்வரன் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்னர் ஓய்வு பெற்றார்.

கண்டிப்புக்கு பெயர் போனவர் என்று பெயர் எடுத்தவர் ராஜேஷ்வரன். போலீஸ் , அரசு தரப்பு என்று எதையும் கணக்கில் எடுத்துகொள்ளாதவர். அரசுக்கு எதிராகவே பல உத்தரவுகளை தான் நீதிபதியாக இருந்த போது பிறப்பித்தவர் எனபது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.ராஜேஷ்வரன்  இவ்விசாரணையை மேற்கொள்வார்.  இந்த விசாரணை ஆணையத்திற்கு  கீழ்க்கண்ட ஆய்வு வரம்புகள் நிர்ணயிக்கப்படும்.

  (i) 23.1.2017 அன்று நடந்த சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளுக்கு மூலமாக இருந்த காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளை கண்டறியவும் அதனால்  பொது மற்றும் தனியாரின் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்து விசாரித்தல்;

(ii) சம்பந்தப்பட்ட காவல் துறையினரால் உரிய அளவில் பலப்பிரயோகம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப்பட்டனவா என்பது குறித்து விசாரித்தல்; 

(iii) காவல் துறையினரின் செயல்பாட்டில் அத்துமீறல் இருந்ததா என்பதை விசாரிக்கவும்; அவ்வாறெனில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை வழங்குதல்;

(iஎ) இனி வரும் காலத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகளை தடுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைத்தல்;

இவ்விசாரணை ஆணையம் தனது விசாரணையை முடித்து அரசிற்கு மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்கும்.

PREV
click me!

Recommended Stories

தி.மலை கோவில் செல்லும் பக்தர்களுக்கு குட்நியூஸ்.. சிலிண்டர் தட்டுப்பாட்டால் அதிரடி முடிவு
கவுன்ட்டவுன் ஸ்டார்ட்.. சவுக்கு சங்கர் சரணடையலனா.. போலீசுக்கு அதிரடி உத்தரவு போட்ட நீதிமன்றம்