இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா? அப்படி கடிதம் எழுதியிருந்தால் அந்த கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இலாக்கா இல்லாத அமைச்சர்
போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.இதன் காரணமாக செந்தில் பாலாஜி வகித்து வந்த துறைகளை மற்ற இரண்டு அமைச்சர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. மேலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடருவார் எனவும் தமிழக அரசு சார்பாக அரசாணை வெளியிடப்பட்டது. இந்தநிலையில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டதை எதிர்த்து தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும்,
நீதிமன்றத்தில் வழக்கு
வழக்கறிஞருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதே கோரிக்கையை வலியுறுத்தி கொளத்தூரை சேர்ந்த ராமசந்திரன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. அமைச்சர்கள் நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தலைமை நீதிபதி அமர்வு மனு தாரரிடம்,
மனு தாரருக்கு நீதிபதி உத்தரவு
செந்தில் பாலாஜி அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பமில்லை எனத் தெரிவித்த ஆளுநர், அவரை நீக்க வேண்டும் என எங்கு சொல்லியிருக்கிறார் என கேள்வி எழுப்பினார். மேலும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க கோரி ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதினாரா? அப்படி கடிதம் எழுதியிருந்தால் அந்த கடிதத்தை தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்ட தலைமை நீதிபதி அமர்வு இந்த வழக்கு விசாரணையை பிறபகலுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதையும் படியுங்கள்