
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 6 மாத சிறை தண்டனை பெற்ற நீதிபதி கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அம்பேத்கர் சிலை முன், இன்று சரணடைய உள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தைச் சேர்ந்த, கர்ணன், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, தலைமை நீதிபதி உட்பட, 20 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுளை சுமத்தினார். இதனால், அவர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் பிரதமருக்கு, ஊழல் பட்டியலை அனுப்பி வைத்தார். இதனால், நீதிபதி கர்ணன் மீது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், உச்சநீதிமன் நீதிபதிகள் அவருக்கு, ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தனர்.
இதையடுத்து கொச்கத்தாவில் இருந்து சென்னைள வந்த நீதிபதி கர்ணன், சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில், தங்கி இருந்ததால்அவரை கைது செய்ய, மேற்கு வங்க டி.ஜி.பி., மற்றும் கூடுதல், டி.ஜி.பி., உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள், சென்னை வந்தனர்.
ஆனால் அவர் காளஹஸ்தி சென்றுவிட்டதாவும், தடா சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது
அவரது மொபைல் போனும், 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்ததால் உறவினர் வீடுகளில், தேடுதல் வேட்டை நடத்தியும் பலன் இல்லை.
இந்நிலையில் நீதிபதி கர்ணன் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க தயாராக இருப்பதாகவும்,அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் நீதிபதிகள் இந்த மனுவை ஏற்க மறுத்துவிட்டனர்.
இந்நிலையில், நீதிபதி கர்ணன், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள, அம்பேத்கர் சிலை முன், இன்று சரணடைய இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து கொல்கத்தா போலீசார் கர்ணனை கைது செய்ய தயாராக உள்ளன.