
அரக்கோணம் அருகே திருமணத்திற்காக கல்யாண மண்டபத்தில் வைத்திருந்த மணப்பெண்ணின் 60 சவரன் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரக்கோணம் அடுத்த சோளிங்கரில் திருமண மண்டபம் ஒன்று உள்ளது. இங்கு இன்று காலை திருமணம் ஒன்று நடக்க இருந்த நிலையில் மாப்பிள்ளை வீட்டாரும் மணப்பெண் வீட்டாரும் திருமண மண்பத்தில் கூடினர்.
அங்கு மணப்பெண்ணிற்கு அலங்காரம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது பெண்ணிற்கு அணிய வைத்திருந்த 60 சவரன் நகையை மர்ம நபர்கள் சிலர் திருடியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து பெண் வீட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் திருமண மண்பத்திற்கு வந்த அனைவரிடமும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். திருமணம் மண்டபத்திலேயே சிலர் நகையை திருடிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.