1980ல் கர்ப்பிணியாக இருந்தாரா ஜெயலலிதா? உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த திடுக் ஆதாரம்..

First Published Jul 26, 2018, 1:48 PM IST
Highlights
Jayalalitha was pregnant in 1980 chennai high court tamilnadu goverement


ஜெயலலிதா மகள் எனக் கூறி அம்ருதா தாக்கல் செய்த ஆவணங்கள் போலி என்றும், அம்ருதா பிறந்த ஆண்டில் ஜெயலலிதா கர்ப்பிணியாக இருக்கவில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாதான் தன்னைப் பெற்ற தாய் என்பதை டி.என்.ஏ மாதிரி மூலம் உறுதிப்படுத்தி, அவரதுஉடலை மீண்டும் சடங்குகள் செய்ய தம்மிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன் மீண்டும்விசாரணைக்கு வந்தது.
 
அப்போது அம்ருதா ஜெயலலிதாவின் மகள் இல்லை என்பதற்கான வீடியோ ஆதாரத்தை தமிழக அரசு தாக்கல் செய்தது. 1980 ஆகஸ்ட்14ஆம் தேதி அம்ருதா பிறந்ததாக வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள அதே சமயத்தில் அம்ருதா பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பு அதாவது 1980,ஜூன் மாதம் நடைபெற்ற பிலிம்பேர் விருது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜெயலலிதா, கர்ப்பிணியாக இருந்ததற்கான எந்த ஆதாரமும்இல்லை என்பது உறுதியாகி இருப்பதாக தமிழக அரசின் வழக்கறிஞர் வாதிட்டார்.
 
ஜெயலலிதாவின் சகோதரி என கூறப்படும் சைலஜா, அம்ருதாவை வளர்த்து வந்ததாக வழக்கில் வைக்கப்படும் வாதத்தில்உண்மையில்லை எனக் குறிப்பிட்ட தமிழக அரசு வழக்கறிஞர், தனது சகோதரரி ஜெயலலிதா எனக்கூறி வார இதழுக்கு பேட்டியளித்தசைலஜாவுக்கு எதிராக சம்பந்தப்பட்ட ஜெயலலிதாவே அவதூறு வழக்கு தொடர்ந்ததற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்தார். இதற்கு பதிலளித்த அம்ருதா தரப்பு வழக்கறிஞர், தன் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்பதை நிரூபிக்க தனக்கும், தீபாவுக்கும் மரபணுசோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், டி.என்.ஏ. சோதனை நடத்தினால் மட்டுமே தனது தரப்பு நியாயங்கள் உண்மை என்பதுதெரிய வரும் என்றும் வாதிட்டார்.
 
மேலும், என்.டி.திவாரி வழக்கில், ஒருவரை மரபணு சோதனைக்கு அனுப்ப நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது. அம்ருதா ஜெயலலிதாவின் மகள் என்பது 100%உண்மை. எனவே மரபணு சோதனை உத்தரவிட வேண்டும். அதில்நிரூபிக்கவில்லை என்றால், அதனால் ஏற்படும் பின்விளைவுகளை மனுதாரர் சந்திக்க தயாராக உள்ளார் என்றும் வாதிட்டார்.
 
ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அரசின் வழக்கறிஞர், எந்த ஒரு ஆதாரங்களும் தாக்கல் செய்யாமல் டி.என்.ஏ சோதனைக்குஉத்தரவிடக் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி,ஜெயலலிதாவின் வாழ்க்கை முழுவதும் மர்மமாகவே இருந்ததாக கருத்து தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை பார்த்தாலே ஒரு திரைப்படம் போல் உள்ளது. ‘கிளைமாக்ஸ்’ காட்சியை நான் எழுத வேண்டும் என்று கூறினார். மேலும் வழக்கு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.

click me!