
பொதுசெயலாளராக நியமிக்கப்பட்ட சின்னம்மா சசிகலா, தற்போது தனது உடை மற்றும் சிகை அலங்காரத்தில் அதிக மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.
பொதுவாக ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, பல்வேறு பொது நிகழ்ச்சிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரங்களின் போது, அவருடன் இணைந்து வெளியே வருவார் சசிகலா. அப்போதெல்லாம் பின்னப்பட்ட சடையுடன், சிகை அலங்காரம் செய்திருப்பார்.
ஆனால், இன்று பதவியேற்க வந்தபோதோ, அவருடைய சிகை அலங்காரத்தில் பெரும் மாற்றம் காணப்பட்டது. ஜெயலலிதாவைபோல் வித்தியாசமான முறையில் கொண்டை அணிந்து, அதற்கு மேல் துணியால் கவர் செய்யப்பட்டு கணப்பட்டார். இதை நேரடியாக பார்த்த தொண்டர்களுக்கும், தெலைக்காட்சியில் நேரலையில் பார்த்த பொது மக்களுக்கும் ஆச்சர்யத்தை கொடுத்தது.
மேலும், எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவிக்க மேடையில் ஏறும்போது, மிகுந்த மிடுக்குடன் அவர் காணப்பட்டார். நேற்றிலிருந்தே சசிகலா, ஜெயலலிதா, பயன்படுத்தி வந்த டெயாடோ பிராடோ காரை பயன்படுத்த தொடங்கிவிட்டார். அதேபோல், தனது அக்காவின், அனைத்து விஷயங்களையும் அப்படியே பின்பற்றுகிறார் அவரது தங்கையான சின்னம்மா சசிகலா.