கமாண்டோ கட்டுப்பாட்டில் வந்தது அப்போலோ - இரண்டு ஐஜிக்கள் பாதுகாப்புக்கு நியமனம்

Asianet News Tamil  
Published : Dec 05, 2016, 05:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:31 AM IST
கமாண்டோ கட்டுப்பாட்டில் வந்தது அப்போலோ - இரண்டு ஐஜிக்கள் பாதுகாப்புக்கு நியமனம்

சுருக்கம்

முதல்வர் ஜெயலலிதா உடல் நிலையை ஒட்டி ஏற்பட்டுள்ள அசாதரண சூழ்நிலையை சமாளிக்க கூடுதலாக இரண்டு ஐஜிக்கள் சென்னையின் பாதுகாப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப் 22 உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முதல்வர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் கிளம்பிய நிலையில் விரைவாக குணமடைந்து வந்தார். விரைவில் அவர் டிஸ்சார்ஜ் ஆவார். டிஸ்சார்ஜ் தேதியையும் அவரே முடிவு செய்வார் என்று அப்போலோ மருத்துவக் குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்து இருந்தார்.

முதல்வருக்கு அனைத்து சிகிச்சைகளும் முடிவடைந்த நிலையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்றுவந்தார். நடப்பதற்கான பயிற்சி எடுத்துவந்த நிலையில் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் ஆவார்  என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் நேற்று மாலை முதல்வருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. 

இதையடுத்து இதயநோய், சுவாசவியல் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தது. நேற்று முதல்வருக்கு சிறிய அளவிலான அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை கண்காணிப்பில் முதல்வர் இருக்கிறார்,என்ற தகவல் தரப்பட்டது. 

ஆனால் நேரம் செல்ல செல்ல அனைத்து நம்பிக்கைகளையும் தகர்க்கும் வண்ணம் ஒவ்வொரு நிகழ்வாக நடந்து வருகிறது. முதல்வர் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக அப்போலோவே அறிக்கை தருகிறது. ரிச்சர்ட் பேல் நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்துவிட்டோம் என்று அறிக்கை தருகிறார். 

இதனால் பதற்றமடைந்த தொண்டர்கள் அலை அலையாய் பக்கத்து மாவட்டங்களிலிருந்து அப்போலோ நோக்கி குவிந்து வருகின்றனர். இதனால் அப்போலோ அமைந்துள்ள கிரீம்சாலை தொண்டர்கள் தலைகளாக காட்சி அளிக்கிறது. அப்போலோ உள்ளேயும் கடல் போல் தொண்டர்கள் குவிந்துள்ளனர். 

எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் எனபதால் ஆயிரக்கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அனைத்து கூடுதல் ஆணையர்களும் காவல் நிலையத்தில் கூடுதலாக உதவி கமிஷனர் தலைமையில் அனைத்து உபகரணங்களுடன் பந்தோபஸ்த்து பணியில் இருக்க உத்தர்விடப்பட்டுள்ளது. 

முதல்வர் அனும்திக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் கமாண்டோ போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் அப்போலோ மருத்துவமனையை கொண்டுவந்துவிட்டனர். 

தற்போது சென்னைக்கு ஐஜி அந்தஸ்த்தில் இரண்டு கூடுதல் ஆணையர்கள் ஷங்கர் மற்றும் ஸ்ரீதர் உள்ளனர். இது தவிர போக்குவரத்து மற்ற பிரிவுகளிலும் கூடுதல் ஆணையர் அந்தஸ்த்தில் அதிகாரிகள் உள்ளனர். 

இவர்களுக்கு கீழ் நான்கு சட்டம் ஒழுங்கு இணை ஆணையர்கள் , உட்பட 6 க்கும் மேற்பட்ட டிஐஜி அந்தஸ்த்தில் அதிகாரிகள் உள்ளனர். தற்போது கூடுதலாக காவல் பணிக்காக ஐஜி அந்தஸ்த்தில் அதிகாரிகள் சாரங்கன் , ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

மக்களே செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் இன்று 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!
போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு.. அக்கவுண்டுக்கு வரும் பல்க் அமௌன்ட்!