
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு லண்டன் டாக்டர் ரிச்சர்டு பிலே, நேரடியாக சென்னை அப்பலோ மருத்துமனைக்கு வந்து சிகிச்கை அளித்தார். ஆனாலும் அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருகிறது.
இந்நிலையில் டாக்டர் பிலே இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் ,முதலமைச்சருக்கு மிக நன்றாக சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவித்துளளார். சர்வதேச தரத்தில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவரது உடல் நிலை மிக மோசமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தன்னால் முடிந்த அளவு என்ன செய்ய முடியுமோ அதை செய்தாகிவிட்டதாகவும் டாக்டர் பிலே தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.