மாணவர்கள் போராட்டம் ஸ்தம்பித்தது சென்னை 

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 10:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
மாணவர்கள் போராட்டம் ஸ்தம்பித்தது சென்னை 

சுருக்கம்

 


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்கள் சென்னை மெரினா கடற்கரையில் ஒன்றிணைந்து போராடுவதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவதிப்பட்டனர்.  கடற்கரையைச் சுற்றியுள்ள சாலைகளான திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, பைகிராப்ட்ஸ் சாலை, சிவானந்தாசாலை, வாலாஜா சாலை, பெல்ஸ் சாலை, ஐஸ்ஹவுஸ் ரோடு உள்ளிட்ட சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால், கடற்கரை சாலையை நோக்கி வரும் பேருந்துகளும், அண்ணா சதுக்கத்தில் இருந்து செல்லும் பேருந்துகளும், கார், பைக் உள்ளிட்ட வாகனங்களும் பல மணிநேரம் வரிசையில் காத்து நின்றன. 

அண்ணாநகர், சோளிங்கநல்லூர், நாவலூர், வேளாச்சேரி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, ராயபுரம், கிண்டி, வடபழனி, அரும்பாக்கம், சேத்பட்டு, அண்ணாசாலை, கிண்டி, ராமாபுரம், ஈக்காட்டுத்தாங்கல், ஆகிய பகுதிகளில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஐ.டி. ஊழியர்கள், இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் சென்னை நகரில் கடும் வாகன நெரிசல் காணப்பட்டது. 

PREV
click me!

Recommended Stories

AIADMK: அதிமுகவை உடைக்க ரூ.1000 கோடி கைமாறியதா? பின்னணி இருக்கும் பெண்? வெளியான அதிர்ச்சி தகவல்!
Supplementary Examination: மார்ச் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா? கவலை வேண்டாம்! துணைத்தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?