மெரினாவில் இரண்டாவது நாளாக டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 07:48 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
மெரினாவில் இரண்டாவது நாளாக டார்ச் வெளிச்சத்தில் போராட்டம்

சுருக்கம்

 

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தும்,பீட்டாவிற்கு தடை விதிக்க வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவியர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினாவில் இளைஞர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம்  இன்று 2 வது நாளாக நீடித்து வருகிறது. நேற்று மெரினாவில் நடைபெற்ற போராட்டத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது தங்களின் செல்போனில் உள்ள டார்ச் மூலம் போராட்டத்தை தொடர்ந்தனர். இன்றும் மெரினாவில் போராட்டம் நடந்து வருகிறது. இருள் வந்த பிறகும் மெரினாவில் தெருவிளக்குகள் எரியவில்லை இதனால் இளைஞர்கள் தங்களின் செல்போன் வெளிச்சத்தில் போராட்டத்தை தொடர்கின்றனர். முன்னதாக முதல்வரின் அறிக்கை குறித்து  காவல் துறை அதிகாரிகள் இளைஞர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியும் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். அதனை ஏற்க மறுத்து  ஜல்லிக்கட்டு நடக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர். மேலும் போராட்டத்தில் பெண்கள், குழந்தைகள் அதிகம்  ஈடுபட்டுள்ளனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்ணீர் பாட்டில் பிஸ்கட், ரெட்டி போன்ற வழங்கப்பட்டன.

PREV
click me!

Recommended Stories

மீனவர் வாழ்வில் ஒளி வீசும்! - கன்னியாகுமரியில் விஜய் கொடுத்த அதிரடி வாக்குறுதிகள் | TVK Vijay Speech
கன்னியாகுமரியில் "சைக்கிளில்" வந்து விஜய் அதிரடி வேட்டை! திகைத்துப்போன தொண்டர்கள் ! | TVK Vijay