"என்னதான் செய்யபோகுது அரசு?" - போலீஸ் அதிகாரிகள் சோர்வு

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 01:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
"என்னதான் செய்யபோகுது அரசு?" - போலீஸ் அதிகாரிகள் சோர்வு

சுருக்கம்

ஜல்லிக்கட்டு மாணவர்களின் எழுச்சியை இதற்கு முன்னர் சென்னை போலீசார் கண்டதில்லை. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவராமல் மவுனம் காக்கும் தமிழக அரசால் போலீஸ் உயர் அதிகாரிகள் சோர்வடைந்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு விவகாரத்தை அரசியல் போராட்டம் போல் எளிதாக கையாளலாம் அரசியல் கட்சித்தலைவர்கள் பேசி முடித்தவுடன் கூட்டம் கலிந்து விடும் எனபது போல் அலட்சியமாக கையாண்ட போலீசாரும் தமிழக அரசும் அதற்கான விலையை இப்போது கொடுத்து வருகிறார்கள் .

முதல் நாள் 200 பேர் மட்டுமே மெரினாவில் கூடினர். நேரம் செல்ல செல்ல அது பரவி பெரிதானது. ஆனால் மாணவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லவைக்க எந்த நடவடிக்கையும் அரசு எடுக்கவில்லை. இதனால் போராட்டம் நேரம் செல்ல செல்ல பெரிதானது. 

இதை யாராவது அமைச்சர்கள் வந்து முடித்து வையுங்கள் என்று சீமான் போன்றோர் கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை.மாறாக எனக்கென்ன என்று அபிராமி மாலில் ஆயிரத்தில் ஒருவன் படத்தை முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் பார்த்து களித்தனர்.

இதன் விளைவு நள்ளிரவில் போராட்டம் தொடர்ந்தது. வேறு வழியில்லாமல் டிஜிபி போன்ற உயர் அதிகாரிகள் முதல்வரிடம் எதாவது செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டதன் பேரில் இரண்டு அமைச்சர்களை நள்ளிரவு அனுப்பினார். ஆனால் அவர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் முடிவில் முதலமைச்சர் அறிக்கை தரட்டும் நாங்கள் போராட்டத்தை முடித்து கொள்கிறோம் என்று கூறிவிட்டனர்.

தமிழக அரசின் , முதலமைச்சர் அமைச்சரவை சகாக்களின் அலட்சியமே இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்று போலீசாரிடையே கடுப்பை கிளப்பியுள்ளது. நேற்று மாலையே பேசி முடித்திருக்க வேண்டிய விஷயம், ஆயிரத்தில் ஒருவன் படம் அதை விட முக்கியமாகி போனது, இப்ப எல்லாவற்றிலும் முன்னாடி நின்று மல்லுக்கட்ட வேண்டியதாக இருக்கிறது என்று போலீஸ் உயர் அதிகாரிகள் சலித்துகொண்டனராம்.

போலீசார் பாதுகாப்பைத்தான் அளிக்க முடியும் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவராமல் ஓடி ஒளியும் இதுபோன்ற அரசியல் தலைமையினால் பெரும் கலவரம் வெடித்து உயிர் பலி நேர்ந்தால் யார் பொறுப்பு என்று உயர் போலீஸ் அதிகாரி சலித்துகொண்டார்.

நேரம் செல்ல செல்ல பள்ளி கல்லூரி மாணவர்கள் திரளுகின்றனர் , கோரிக்கையும் இஷ்டத்துக்கு வைக்கிறார்கள், இப்படித்தான் நடக்கும். இதை முடிவுக்கு கொண்டுவராவிட்டால் பலப்பிரயோகமும் செய்ய முடியாது, ஏன் இப்படி ஒரு அலட்சியம் என்பது பொது மக்களின் கேள்வியாக இருக்கிறது 

PREV
click me!

Recommended Stories

அதிமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி இரட்டிப்பு ‍ - இபிஎஸ்
திமுக, அதிமுக-வுக்கு செக் வைத்த TVK! மதுரையில் CTR நிர்மல் குமார் அதிரடி பேட்டி !