சேலம், தேனி, மதுரை மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… தீவிரமடையும் போராட்டம்..

Asianet News Tamil  
Published : Jan 18, 2017, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:59 AM IST
சேலம், தேனி, மதுரை  மாவட்டங்களில் தடையை மீறி ஜல்லிக்கட்டு… தீவிரமடையும் போராட்டம்..

சுருக்கம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து கொந்தளித்துப் போயுள்ளனர். ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என உறுதியுடன் உள்ள பொதுமக்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகின்றனர்.

அதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லுர், திண்டுக்கல், நாமக்கல்,கோவை,திருச்சி ஆகிய இடங்களில் ஜல்லிகட்டு நடத்தப்பட்டது.

இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கூலமங்கலத்தில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதையடுத்து போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பொதுமக்கள் மீது , தடியடி நடத்திய போலீசார் மீது மக்கள் கற்களை வீசி தாக்கினர். 



சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மருதிப்பட்டியில் தடையை மீறி மஞ்சு விரட்டு நடந்தது. இதில் 20க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் உற்சாகமாய் அடக்கினர்.உடனடியாக அங்கு வந்த போலீசார் அதை தடுத்து நிறுத்தியதால் பதற்றம் ஏறப்பட்டது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இன்று தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. 100 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இதில் பங்கேற்றனர்.

இதே போன்று மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்றும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

PREV
click me!

Recommended Stories

இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Budget Ooty Trip| 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்..ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்...விலை ?